தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. அடுத்ததாக அவ்விரு அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. அந்தத் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள கேர்ன்ஸ் நகரில் இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 50 ஓவரில் 296/8 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் மேத்தியூ பிரீட்ஸ்கே 57, கேப்டன் தெம்பா பவுமா 65, ஐடன் மார்க்ரம் 82, ரன்கள் குவித்து அசத்தினார்கள்.
மஹாராஜ் மாயாஜாலம்:
அதே போல ரியன் ரிக்கல்டன் 33, வியான் முல்தர் 31* ரன்கள் அடித்து கை கொடுத்தார்கள். ஆஸ்திரேலியா அணிக்கு அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் மிட்சேல் மார்ஷ் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் எதிர்புறம் ஜோடி சேர்ந்து அதிரடி காட்ட முயற்சித்த ட்ராவிஸ் ஹெட் 27 (24) ரன்னில் அவுட்டானார்.
ஆனால் அடுத்து வந்த லபுஸ்ஷேன் 1, கேமரூன் கிரீன் 3, ஜோஸ் இங்லீஷ் 5, அலெக்ஸ் கேரி 0, ஆரோன் ஹார்டி 4 ரன்களில் கேசவ் மகாராஜ் வீசிய மாயாஜால சுழல் பந்துகளில் அவுட்டாகி அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். அதனால் ஆஸ்திரேலியா 89/6 என தடுமாறிய ஆஸ்திரேலியாவுக்கு மறுபுறம் கேப்டன் மார்ஷ் நிதானமாக விளையாடி அரை சதத்தை அடித்தார். எதிர்ப்புறம் நங்கூரமாக விளையாடிய பென் ட்வர்சுய்ஸ் 33 ரன்களில் அடித்து அவுட்டானர்.
வரலாற்று வெற்றி:
அடுத்த சில ஓவர்களில் கேப்டன் மார்ஷ் 88 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இறுதியில் நாதன் எலீஸ் 14, ஆடம் ஜாம்பா 11 ரன்கள் எடுத்தும் ஆஸ்திரேலியாவை 40.5 ஓவரில் 198 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல் அவுட்டாக்கியது. அதனால் 98 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அக்சர் படேலுக்கு ஆசை காட்டி மோசம் செய்த இந்திய அணியின் நிர்வாகம் – ஒருதலை பட்சமான நடவடிக்கை
அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா தங்களுடைய மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவை 1994ஆம் ஆண்டு பெர்த் மைதானத்தில் 82 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததே தென்னாப்பிரிக்காவின் முந்தைய பெரிய வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய கேசவ் மகாராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.



