செமி ஃபைனல் வாய்ப்பை பறித்த ஒற்றை தவறு.. போராடி வெளியேறிய ஆப்கானிஸ்தான்.. தெ.ஆ வெற்றி

RSA vs AFG
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 10ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற 42வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் தென்னாப்பிரிக்காவை 400 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தால் மட்டுமே செமி ஃபைனலுக்கு பையனுக்கு செல்ல முடியும் என்ற அசாத்தியமான சூழ்நிலையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ரஹமனுல்லா குர்பாஸ் 25, இப்ராஹிம் ஜாட்ரான் 15 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த கேப்டன் ஷாகிதி 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அந்த நிலைமையில் வந்த ஓமர்சாய் நிதானமாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் ரஹமத் ஷா 26 ரன்களிலும் அடுத்ததாக வந்த இக்ரம் கில் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

வெளியேறிய ஆப்கானிஸ்தான்:
போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் முகமது நபி 14, ரசித் கான் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் ஆப்கானிஸ்தான் 200 ரன்கள் எடுக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஓமர்சாய் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி சதத்தை நழுவ விட்டபோதிலும் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 97* (107) ரன்கள் குவித்து அசத்தினார்..

அதனால் 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 245 என்ற சுலபமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு 64 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் தெம்பா பவுமா 23 ரன்களில் அவுட்டாக மறுபுறம் அசத்திய குவிண்டன் டீ காக் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அந்த நிலைமையில் வந்த வேன் டெர் டுஷன் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் நங்கூரத்தை போட முயற்சித்த ஐடன் மார்க்கம் 25, ஹென்றிச் க்ளாஸென் 10 ரன்களில் ரசித் கான் சுழலில் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து வந்த டேவிட் மில்லர் தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடி 24 ரன்களில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட போதிலும் மறுபுறம் தொடர்ந்து சவாலாக விளையாடிய டுசன் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 76* (95) ரன்கள் குவித்தார்.

அவருடன் கடைசியில் ஆண்டிலோ பெலுக்வியோ 33* (37) ரன்கள் எடுத்ததால் 47.3 ஓவர்களிலேயே 247/5 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் ரசித் கான் மற்றும் முகமது நபி ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் ஆப்கானிஸ்தான் போராடி இத்தொடரிலிருந்து லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது.

இதையும் படிங்க: இனிமேல் அவ்ளோ தான்.. இலங்கை அணிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட அதிகாரப்பூர்வமாக தடை விதித்த ஐசிசி

குறிப்பாக இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் போன்ற டாப் அணிகளை தோற்கடித்து எழுச்சி கண்ட ஆப்கானிஸ்தானின் செமி ஃபைனல் வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேக்ஸ்வெல் கொடுத்த கேட்ச்சை முஜீப் தவற விட்டதால் முக்கால்வாசி பறிபோனது என்றே சொல்லலாம். இருப்பினும் அந்த அணி பல ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை அள்ளியதுடன் வருங்காலத்தில் அசத்தும் அணியாக முன்னேறியுள்ளது. மறுபுறம் இந்த வெற்றியால் தென்னாபிரிக்கா 2வது இடத்தை உறுதி செய்து செமி ஃபைனலில் விளையாட தயாராகியுள்ளது.

Advertisement