இலங்கை மற்றும் தென்னாபிரிக்க வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் இணைவதில் சிக்கல் – விவரம் இதோ

ipl trophy
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கிய 14-வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா வைரஸ் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளும் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்த நிலையில் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

IPL

இந்நிலையில் இந்தத் தொடரின் முதல் வாரத்தில் கலந்து கொள்ள தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணி வீரர்களுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வரும் 19ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளவிருக்கும் வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகம் வந்தடையும் போது ஆறு நாட்கள் கட்டாய குவாரண்டைனில் இருக்க வேண்டும்.

- Advertisement -

தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. அவர்கள் நேரடியாக அந்த பயோ பபுளில் இருந்து ஐபிஎல் பயோ பபுளில் இணைவதால் அவர்களுக்கு குவாரன்டைன் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரீபியன் லீக் தொடரில் இருந்து வரும் வீரர்கள் நேரடியாக அணியில் இணைந்து தொடரில் விளையாடுவார்கள்.

cpl 1

ஆனால் தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா இலங்கை தொடரில் பங்கேற்று இருக்கும் வீரர்கள் அப்படி எளிதில் அமீரகத்தில் உள்ள அணிகளுடன் இணைய முடியாது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் வீரர்களான டிகாக், மார்க்ராம், ஷம்ஸி மற்றும் இலங்கை வீரர்களான ஹசரங்கா, சமீரா போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரின் முதல் சில நாட்கள் விளையாட முடியாது.

dekock 1

இன்று நடைபெறும் கடைசி டி20 போட்டிக்குப் பின்னர் நாளை அமீரகம் பயணித்தார்கள் என்றாலும் ஆறு நாட்கள் அவர்கள் கட்டாய குவாரன்டைனில் இருக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் தங்களது அணிகளுடன் இணைய முடியும் என்பதனால் 21ம் தேதிக்கு பிறகே அவர்களால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement