417 ரன்ஸ் சேசிங்கில்.. ஒரே நாளில் இந்தியா ஏ அணியை பொளந்த தெ.ஆ.. மாஸ் வெற்றியுடன் சமன் பதிலடி

RSA A
- Advertisement -

தென்னாபிரிக்கா ஏ கிரிக்கெட் அணிக்கு இந்தியா ஏ அணி தங்களது சொந்த மண்ணில் 2 பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்ற நிலையில் 2வது போட்டி நவம்பர் 6ஆம் தேதி பெங்களூருவில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஏ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி போராடி 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துருவ் ஜுரேல் சதத்தை அடித்து 132*, கேப்டன் ரிஷப் பண்ட் 24 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக டியான் வன் உரேன் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை சிறப்பாக பந்து வீசிய இந்தியா ஏ அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.

- Advertisement -

அசத்திய இந்தியா:

அதிகபட்சமாக கேப்டன் மார்க்கஸ் ஆக்கர்மேன் சதத்தை அடித்து 134 ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 3, முகம்மது சிராஜ் 2, ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அடுத்ததாக 34 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா ஏ அணி 382/7 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

அதிகபட்சமாக துருவ் ஜுரேல் மீண்டும் சதத்தை அடித்து 127*, ஹர்ஷ் துபே 84, கேப்டன் ரிஷப் பண்ட் 65 (54) ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ஓக்லே சேலே 3 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 417 என்ற இமாலய இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்கா ஏ 3வது நாள் முடிவில் 25/0 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் கடைசி நாளில் ஒன்று ஆட்டம் டிரா அல்லது இந்தியா வெல்வதற்கான சூழ்நிலைகள் உருவானது.

- Advertisement -

பொளந்த தென்னாப்பிரிக்கா:

ஆனால் கடைசி நாளில் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய தென்னாப்பிரிக்கா அபாரமாக பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு 156 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோர்டான் ஹர்மன் 91 ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் இணைந்து விளையாடிய லேசாகோ செனோக்வனே 77 ரன்கள் ரன்கள் குவித்து அசத்தினார். அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் ஸுபாயர் ஹம்சா 77, தெம்பா பவுமா 59, கேப்டன் ஆகர்மேன் 24 ரன்கள் எடுத்தனர்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரை வெல்ல இவரே காரணம்.. இவர்தான் கீ பிளேயர் – இர்பான் பதான் பாராட்டு

கடைசியில் அதிரடியாக விளையாடிய கோனர் 52* (54), டியான் வன் உரேன் 20* (23) ரன்களை எடுத்தனர். அதனால் 417/5 ரன்களை அடித்த தென்னாப்பிரிக்கா ஏ அணி 5 விக்கெட் அற்புதமான வெற்றி பெற்று 1 – 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. குறிப்பாக கடைசி நாளில் மட்டும் கிட்டத்தட்ட 400 ரன்கள் அடித்த தென்னாப்பிரிக்கா ஏ அணி இந்தியாவை சொந்த மண்ணில் பொளந்தது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு இந்தியாவின் பவுலிங் மோசமாக இருந்தது ரசிகர்களின் கவலையடைய வைத்துள்ளது.

Advertisement