ராஜஸ்தான் vs சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் – 2 பேர் கைது – வெளியான அதிர்ச்சி தகவல்

RRvsSRH
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 14வது ஐபிஎல் சீசன் வீரர்களிடையே பரவிய கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடரானது பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை கால வரையறையின்றி இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் நடைபெற்ற ஒரு போட்டியில் சூதாட்டம் நடைபெற்று உள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி கடந்த 2-ஆம் தேதி டெல்லி மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான இந்த போட்டியில் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து டெல்லி போலீசார் 2 மர்ம நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி மைதானத்திற்குள் நுழைந்த உள்ளதால் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

அவர்களை கைது செய்தது மட்டுமின்றி கோர்ட்டில் ஆஜர்படுத்தி 5 நாட்கள் காவலில் கொண்டு சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் தரப்பில் வெளியான அறிக்கையில் : குற்றம்சாட்டப்பட்டவர்கள் வீட்டு பராமரிப்பு ஊழியராக காட்டிக்கொண்டு காட்டிக்கொண்டு மைதானத்திற்குள் நுழைந்துள்ளனர்.

umpire

அவர்களிடம் இருந்த அங்கீகார அட்டை பறிமுதல் செய்து விசாரித்தபோது அது போலியான அட்டை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் : குற்றம்சாட்டப்பட்ட அந்த 2 மர்ம நபர்களும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

williamson

மேலும் மைதானத்தில் 45 நிமிடங்கள் வரை அவர்களை கண்காணித்த பிறகே போலீசார் அந்த இருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட அந்த 2 மர்ம நபர்கள் மீது 8 பிரிவில் (419, 420, 468, 471, 188, 269, 120B, 34) வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது அவர்கள் சிறைப் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement