இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து வெளியேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த மோசமான செயல்பாடு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்த வேளையில் அந்த அணியின் நிர்வாகத்திற்கும் பெரியளவில் வருத்தத்தை தந்தது.
சஞ்சு சாம்சன் எங்கும் செல்லவில்லை : ராஜஸ்தான் ராயல்ஸ்
ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக விளையாடி வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஆண்டு படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. அதோடு மட்டுமின்றி இந்த சீசனில் பல போட்டிகளை காயம் காரணமாக சஞ்சு சாம்சன் தவறவிட்ட வேளையில் அவருக்கு பதிலாக ரியான் பராக் அந்த அணியை வழிநடத்தி இருந்தார்.
இதன் காரணமாக இனி ரியான் பராக் தொடர்ந்து கேப்டனாக நீடிப்பார் என்றும் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்பு இருப்பதாக பல்வேறு செய்திகள் கடந்து சில மாதங்களாகவே வெளியாகி வந்தன. அதோடு சஞ்சு சாம்சனுக்கும் ராஜஸ்தான் நிர்வாகத்தின் மீது மனக்கசப்பு இருப்பதால் அவரே வெளிவந்து வேற அணிக்கு செல்வார் என்றும் பேசப்பட்டது.
அதிலும் குறிப்பாக சி.எஸ்.கே அணி அவரை டிரேடிங் செய்ய உள்ளதாகவும், சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே அணிக்கு வருவதால் ஷிவம் துபே அல்லது ஜடேஜா ஆகிய இருவரில் ஒருவர் அந்த அணிக்கு செல்வார்கள் என்றெல்லாம் சில தகவல்கள் வெளியாகி இருந்தன. இப்படி சஞ்சு சாம்சனின் அணி மாற்றம் குறித்து கடந்த சில மாதங்களாகவே பல்வேறு செய்திகள் சமூக வலைதளத்தினை ஆக்கிரமித்து வருகின்றன.
இந்நிலையில் சஞ்சு சாம்சனை யாரும் டிரேடிங் செய்யவில்லை என்றும் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேற மாட்டார் என்றும் அந்த அணியின் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அந்த அணி சார்பாக வெளியான அறிவிப்பின் படி :
இதையும் படிங்க : காலில் கட்டுடன் விளையாடிய சிராஜ்.. இவரோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல – விவரம் இதோ
சஞ்சு சாம்சன் எங்கும் செல்லவில்லை அவர் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவே விளையாடுவார் என அந்த அணியின் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே எந்த ஒரு டிரேடிங் பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்றும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் தான் தொடர்வார் என்பதும் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.



