
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்த நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 47-வது லீக் போட்டியில் விளையாடிய ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்ஸ் அணியானது 210 ரன்கள் என்கிற இலக்கினை வெறும் 15.5 ஓவர்களில் சேசிங் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெற்ற வெற்றி பலரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் எப்போதுமே 200-க்கும் மேற்பட்ட இலக்கு என்பது சவாலான ஸ்கோர் என்பதனால் போட்டி இறுதி வரை பரபரப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும். ஆனால் நேற்றைய போட்டியை பொறுத்தவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அந்த ஸ்கோரை எளிதாக சேசிங் செய்து அசத்தியது. இந்த போட்டியில் துவக்க வீரர்களாக விளையாடிய ஜெய்ஸ்வால் மற்றும் சூரியவன்ஷி ஆகியோர் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆரம்பித்து இந்த சேஸிங்கை மிகவும் எளிதாக்கினார்.
அதிலும் குறிப்பாக முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அவர்கள் 11.5 ஓவர்களில் 166 ரன்களை குவித்து அசத்தியிருந்தனர். சூர்யவன்ஷி 38 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர்கள் என 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மறுபுறம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஜெய்ஸ்வால் 70 ரன்கள் குவித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
அவர்கள் இருவரது இந்த மிகச் சிறப்பான அதிரடி காரணமாக ராஜஸ்தான் அணியானது 210 ரன்கள் என்கிற இலக்கினை 16 ஓவர்களுக்குள் சேசிங் செய்தது மட்டுமின்றி நான்கு ஓவர்கள் மிச்சம் இருக்கும் வேளையில் போட்டியை வெற்றிகரமாக முடித்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சன்ரைசர்ஸ் அணியின் மாபெரும் சாதனை ஒன்றினையும் சமன் செய்து அசத்தியுள்ளது.
அது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 100 ரன்களை அடித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் அணி தன்வசம் வைத்திருந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் அணியானது 7.4 ஓவர்களில் 100 ரன்களை அடித்து சாதனையை நிகழ்த்தியிருந்தது.
இதையும் படிங்க : 2025 ஐ.பி.எல் தொடரில் அசத்தி வரும் ஆயுஷ் மாத்ரே மற்றும் வைபவ் சூர்யவன்ஷிக்கு அடித்துள்ள ஜாக்பாட் – பி.சி.சி.ஐ முடிவு
அந்த சாதனையை நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி சமன் செய்தது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும் 7.4 ஓவர்களில் 100 ரன்களை அடித்து அவர்களின் அதிவேக 100 ரன்கள் சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.