அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக டிரேடிங் முறையானது நடைமுறையில் இருந்த வேளையில் இந்த ஆண்டின் மிகப்பெரிய டிரேடிங்காக பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் மற்றும் ஜடேஜா ஆகியோரது டிரேடிங் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் வெளியான டிரேடிங் முடிவின் படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வர்த்தகம் செய்தது என்று அறிவிக்கப்பது.
ரவீந்திர ஜடேஜா ஒரு மாசத்துக்கு முன்னதாகவே முடிவை எடுத்துட்டாரு : மனோஜ் படாலே
அதேபோன்று சி.எஸ்.கே அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வர்த்தகம் செய்தது என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வந்த ரவீந்திர ஜடேஜாவை சென்னை அணி விடுவித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதேவேளையில் தனது ஐ.பி.எல் கரியரின் ஆரம்பகட்டத்தை ராஜஸ்தான் அணியில் இருந்து துவங்கிய ரவீந்திர ஜடேஜா மீண்டும் அந்த அணிக்கு திரும்பியது அந்த அணியின் நிர்வாகத்திடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ரவீந்திர ஜடேஜா இந்த டிரேடிங் முடிவை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தங்களிடம் வெளிப்படுத்தி விட்டார் என தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரான மனோஜ் படாலே சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : டிரேடிங் முறை அறிவிக்கப்பட்டதும் கடந்த நான்கு வாரங்களுக்கு முன்னதாகவே ஜடேஜா எங்களை அணுகி சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அக்டோபர் மாதம் அவர் நான் மீண்டும் எனது வீட்டிற்க்கே வருகிறேன் என்றும் எனது ஐபிஎல் கரியர் ஆரம்பித்த இடத்திலிருந்து மீண்டும் நான் பயணிக்க விரும்புகிறேன் என்றும் கூறியிருந்தார்.
கடந்த முறை நான் அவரை 21 வயது இளம் வீரராக கடைசியாக ராஜஸ்தான் அணியில் பார்த்திருந்தேன். தற்போது அவர் ஒரு ஜாம்பவானாக மாறி மீண்டும் எங்களது அணிக்குள் வந்ததில் மகிழ்ச்சி. ஒரு விடயத்தை நாங்கள் தெளிவாக கூறிக் கொள்கிறோம். நாங்கள் ரவீந்திர ஜடேஜாவை மட்டும் டிரேட் செய்யவில்லை அவருடன் சேர்ந்து சாம் கரனையும் டிரேட் செய்துள்ளோம்.
இதையும் படிங்க : 124 ரன்ஸ்.. தெ.ஆ 21 வருடத்தை மிஞ்சிய வரலாறு காணாத இலக்கு.. இந்தியா சேசிங் செய்து சாதனை படைக்குமா?
இந்த இருவரும் அடுத்த சீசனில் எங்களுக்கு மூன்று, நான்கு ரோல்களை பூர்த்தி செய்வார்கள் என்று தான் நம்புவதாக மனோஜ் படாலே கூறியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது ஐ.பி.எல் கரியரின் ஆரம்ப கட்டத்தில் ஜடேஜா 27 போட்டிகளில் விளையாடி 430 ரன்களையும், 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள வேளையில் தற்போது மீண்டும் ராஜஸ்தான் அணியுடன் அவர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



