சஞ்சு சாம்சன் மட்டுமல்ல மேலும் ஒரு ஸ்டார் பிளேயரையும் வெளியேற்ற இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் – விவரம் இதோ

Samson and Jurel
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தாங்கள் விளையாடிய 14 ஆட்டங்களில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாம் இடத்தை பிடித்து வெளியேறியது. கடந்த பல ஆண்டுகளாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராஜஸ்தான் அணி இந்த ஆண்டு மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறும் இளம்வீரர் :

இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் இந்த மோசமான செயல்பாடு காரணமாக அடுத்த 2026 ஐபிஎல் தொடரில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று பேசப்பட்டு வரும் வேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருக்கும் சஞ்சு சாம்சன் அங்கிருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் இளம் வீரரான ரியான் பராக்கை கேப்டனாக நியமிக்க யோசித்து வருவதால் சஞ்சு சாம்சன் அந்த அணியிலிருந்து விலகி சென்னை அணிக்கு வர இருக்கிறார் என்றெல்லாம் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றது.

அதுமட்டும் இன்றி சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வரும் பட்சத்தில் சி.எஸ்.கே அணியும் சாம்சனுக்கு ஈடாக இரண்டு வீரர்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ராஜஸ்தான் அணியின் நிர்வாகமும் நிபந்தனை விதித்தது என்றெல்லாம் செய்திகள் வெளியாகியிருந்தன.

- Advertisement -

இந்நிலையில் சஞ்சு சாம்சன் மட்டும் இன்றி அந்த அணியின் நட்சத்திர இளம் ஆட்டக்காரரான துருவ் ஜூரேலும் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு அந்த அணியால் 14 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு தக்க வைக்கப்பட்ட அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெரியளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் தெ.ஆ வீரராக கேஷவ் மகாராஜ் நிகழ்த்திய வரலாற்று சாதனை – விவரம் இதோ

இதன் காரணமாக அவரை அணியிலிருந்து வெளியேற்றி பின்னர் மினி ஏலத்தின் போது மீண்டும் சிறிய தொகைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று ராஜஸ்தான் அணி நினைக்கிறது. ஆனால் மினி ஏலத்தில் பங்கேற்கும் ஜுரேல் எவ்வளவு தொகைக்கு செல்வார் என்பது உறுதியாக தெரியாது என்பதால் அவரை அந்த அணி கழட்டிவிடவும் அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement