SRH vs RR : அட்டகாசம் செய்த ராஜஸ்தான் – சொந்த மண்ணில் தவறான முடிவால் ஹைதராபாத் வெற்றி பறிபோனது எப்படி?

Chahal RR vs SRH
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று நடைபெற்ற 2 போட்டிகளில் மதியம் 3.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 4வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 203/5 ரன்கள் குவித்து மிரட்டியது. அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே சரவெடியாக பேட்டிங் செய்து 6 ஓவரில் 85 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோஸ் பட்லர் – யசஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் ராஜஸ்தானின் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்ய உதவினர்.

அந்த ஜோடியில் வெறித்தனமாக பேட்டிங் செய்த ஜோஸ் பட்லர் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 54 (37) ரன்களில் ஆட்டமிழக்க தனது பங்கிற்கு சிறப்பாக செயல்பட்ட யசஎஸ்வி ஜெய்ஸ்வால் 9 பவுண்டரியுடன் 54 (37) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த தேவதூத் படிக்கல் 2, ரியான் பராக் 7 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் பொறுப்புடனும் அதிரடியாகவும் செயல்பட்ட கேப்டன் சஞ்சய் சாம்சன் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 55 (32) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதியில் சிம்ரோன் ஹெட்மயர் 22* (16) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுக்க ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக பரூக்கி மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதை தொடர்ந்து 204 என்ற கடினமான இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மா மற்றும் ராகுல் திரிபாத்தி ஆகியோர் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

அதனால் ஏற்பட்ட சரிவை சரி செய்வதற்காக மெதுவாக விளையாடிய ஹரி ப்ரூக் 13 (21) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 1, கிளன் பிலிப்ஸ் 8 என முக்கிய வீரர்களும் ராஜஸ்தானின் தரமான பந்து வீச்சில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி பின்னடைவை கொடுத்தனர். போதாக்குறைக்கு மறுபுறம் நங்கூரமாக விளையாட முயன்ற மயங் அகர்வாலும் 27 (23) ரன்களில் அவுட்டானதால் ஹைதராபாத் அணியின் கதையும் முடிந்தது.

- Advertisement -

ஏனெனில் இறுதியில் அப்துல் சமத் 32* (32), அடில் ரசித் 18 (13), உம்ரான் மாலிக் 19* (8) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை எடுத்து போராடியதால் ஆல் அவுட்டாவதை தவிர்க்க முடிந்ததே தவிர 20 ஓவர்களில் ஹைதராபாத் 131/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் ஆரம்பம் முதலே துல்லியமாக செயல்பட்டு 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக யுஸ்வென்ற சஹால் 4 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் இரட்டை சதத்தின் உதவியுடன் இந்தியா வென்றது உட்பட இந்த போட்டி நடைபெற்ற ஹைதராபாத் மைதானம் பெரும்பாலும் முதலில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக பகல் நேரத்தில் பனியின் தாக்கம் எதுவுமே இருக்காது என்று தெரிந்தும் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்து ரன்களை வாரி வழங்கியது ஆரம்பத்திலேயே தோல்வியை உறுதி செய்தது. ஏனெனில் அந்த அணி ஐபிஎல் வரலாற்றில் எப்போதுமே 200+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்ததே கிடையாது.

இதையும் படிங்க: என் வாழ்வில் மறக்கமுடியாத அந்த 20 நிமிடங்கள் இதுதான். 12 ஆண்டுகால நினைவை பகிர்ந்த – தோனி

மறுபுறம் பேட்டிங்கில் மிரட்டியது போலவே பந்து வீச்சில் முதல் ஓவரிலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ராஜஸ்தான் அதிரடியான வெற்றி பெற்று இந்த சீசனை வெற்றியுடன் துவக்கியுள்ளது. குறிப்பாக கடந்த வருடம் ஃபைனல் வரை சென்று தவற விட்ட கோப்பையை இம்முறை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள அந்த அணி சஞ்சு சாம்சன் தலைமையில் 3 துறைகளிலும் அசத்தலாக செயல்பட்டு பெரிய வெற்றியை சுவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement