லக்னோ அணியை 7090 கோடிக்கு வாங்கிய இவர் ஏற்கனவே ஒரு ஐ.பி.எல் அணிக்கு ஓனராம் – எந்த டீம் தெரியுமா ?

Rpsg-1
- Advertisement -

இதுவரை 14 ஐபிஎல் சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த வேளையில் அடுத்த ஆண்டு 2022-ல் மேலும் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெறும் என ஏற்கனவே பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது. அதன்படி துபாயில் இந்த புதிய 2 அணிகளுக்கான ஏலம் நடைபெற்று இரண்டு புதிய அணிகளும் வாங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தில் சுமார் 12 கோடி ரூபாய் வரை பிசிசிஐ வருமானம் ஈட்டி அந்த இரண்டு புதிய அணிகளையும் விற்றுள்ளது.

IPL-bcci

- Advertisement -

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை மையமாகக் கொண்டு ஒரு அணியும், உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மையமாகக் கொண்டு ஒரு அணியையும் உருவாக்கியுள்ளனர். இதில் லக்னோ அணியை 7090 கோடி ரூபாய்க்கு ஆர்.பி.எஸ்.ஜி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா வாங்கியுள்ளார். அதேபோன்று அகமதாபாத் அணியை 5,600 கோடி ரூபாய்க்கு சி.வி.சி கேபிடல்ஸ் குழுமம் வாங்கியுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் லக்னோ அணியை வாங்கிய சஞ்சீவ் கோயங்கா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஏனெனில் லக்னோ அணி 2,000 கோடி ரூபாய் அடிப்படை ஏலமாக கொண்டிருந்த வேளையில் 7090 கோடி வரை சென்று அந்த அணியை ஏலத்தில் எடுத்துள்ளார். இந்நிலையில் சஞ்சீவ் கோயங்கா யார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

rpsg

அதன்படி கொல்கத்தாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆர்.பி.எஸ்.ஜி குழுமத்தின் தலைவரான சஞ்சீவ் கோயங்கா ஏற்கனவே தோனி தலைமையிலான புனே அணியை கடந்த 2016-17-ல் வாங்கியிருந்தார். அதன் பிறகு தற்போது லக்னோ அணியை வாங்கியுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஏழாவது இடத்தை பிடித்த புனே அணி 2017 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணி மீண்டும் வெற்றிக்கு திரும்ப இதை செய்ஞ்சா போதும் – கவாஸ்கர் அறிவுரை

ஆர்.பி.எஸ்.ஜி குழுமத்தின் தலைவரான சஞ்சீவ் கோயங்கா-விற்கு இந்திய மதிப்பு படி சுமார் 47,405 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே கால்பந்து தொடரில் பங்கேற்கும் ஒரு அணியையும், டேபிள் டென்னிஸ் அணியையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நிச்சயம் லக்னோ அணி நிச்சயம் மிகச்சிறப்பான வீரர்களை தேர்வு செய்து பலமாக தொடருக்குள் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement