4 வருடத்துக்கு முன்பே சுப்மன் கில்.. இதை செய்வாருன்னு டிராவிட் கணித்தது உண்மை ஆகிடுச்சு.. ஆர்பி சிங்

RP Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஆல் ஃபார்மட் கேப்டனாக சுப்மன் கில் உருவாக்கப்பட்டு வருகிறார். பஞ்சாப்பை சேர்ந்த அவர் 2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அடுத்த சில வருடங்களில் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2021 காபா டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் மறக்க முடியாத வெற்றியில் பங்காற்றினர்.

அதனால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் வாய்ப்பு பெற்ற அவர் இரட்டை சதத்தை அடித்து சிறப்பாக விளையாடி இன்று ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார். டி20 கிரிக்கெட்டிலும் கணிசமாக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 2023 ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்றார். அதனால் குஜராத் அணியின் கேப்டனாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

- Advertisement -

அன்றே கணித்த டிராவிட்:

அந்த வாய்ப்பில் 2025 சீசனில் கில் தலைமையில் குஜராத் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்று அசத்தியது. அதன் காரணமாக ரோஹித் சர்மாவுக்கு பின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் இங்கிலாந்தில் 754 ரன்கள் குவித்து 2 – 2 (5) என்ற கணக்கில் இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். அதனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் ரோஹித்தை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு அவரை கேப்டனாக நியமித்துள்ளது.

டி20 கிரிக்கெட்டில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர் சூரியகுமாருக்கு பின் இந்தியாவை தலைமைத் தாங்க தயாராகி வருகிறார். இந்நிலையில் சுப்மன் கில் இந்தியாவின் வருங்கால கேப்டனாவார் என்று 5 வருடங்களுக்கு முன்பே ராகுல் டிராவிட் கணித்ததாக ஆர்பி சிங் தெரிவித்துள்ளார். தற்போதைய தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கேப்டனான கில்:

“ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வருவதற்கு முன் ஒருமுறை நாங்கள் அமர்ந்து இந்திய கிரிக்கெட்டைப் பற்றி பேசினோம். அப்போது யார் இந்தியாவின் அடுத்த பெரிய வேகப்பந்து வீச்சாளர், ஸ்பின்னர் என்பனவற்றைப் பேசினோம். அந்த உரையாடலின் இறுதியில் ராகுல் பாய் இந்தியாவின் அடுத்த கேப்டனாக யார் வருவார் என்று நினைக்கிறீர்கள்? எனக் கேட்டேன்”

இதையும் படிங்க: கில் சரியான செலக்சன்.. ஆனா அதுக்கு ஃபிட்டாகாத ஸ்ரேயாஸ் இங்க மட்டும் எப்படி வந்தாரு? வெங்சர்க்கார் பேட்டி

“அச்சமயத்தில் கேப்டனாக தேர்ந்தெடுக்க ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் போன்ற நிறைய வீரர்கள் இருந்தனர். ஆனால் அடுத்த கேப்டன் சுப்மன் கில் என்று டிராவிட் சொன்னார். அது 4 வருடத்திற்கு முன்பு சொன்னது. அதற்கு ராகுல் பாய் கில் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடவில்லையே என்று சொன்னேன். அனைத்தையும் விடுங்கள் கில்லிடம் மகத்தான திறமை இருக்கிறது. எனவே ஒருநாள் அவர் இந்தியாவின் கேப்டனாகி நீண்ட காலம் செயல்படுவார் என்று டிராவிட் சொன்னார்” எனக் கூறினார்.

Advertisement