இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.
அது போக சஞ்சு சாம்சன் கழற்றி விடப்பட்டதும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா கோப்பை வெல்ல உதவிய ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்படாததும் ரசிகர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. அப்படி பல அதிருப்தியான தேர்வுக்கு மத்தியில் ஸ்ரேயாஸ் ஐயர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டது மட்டுமே இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.
குழப்பமான ஸ்ரேயாஸ்:
ஏனெனில் 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தாவின் கேப்டனாக வென்ற அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினர். 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப்பை 14 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற அவர் 600+ ரன்கள் விளாசி நல்ல ஃபார்மில் இருக்கிறார். இருப்பினும் ஆசியக் கோப்பையில் கழற்றி விடப்பட்ட அவருக்கு ஒருநாள் அணியில் துணை கேப்டனாக வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையே ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியுடன் வெளியேறினார். குறிப்பாக முதுகில் செய்த அறுவை சிகிச்சையால் தற்காலிகமாக தாம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அவர் பிசிசிஐ’க்கு கடிதம் எழுதினார்.
கில் சரியான தேர்வு:
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஃபிட்டாக இல்லாத ஸ்ரேயாஸை ஒருநாள் கிரிக்கெட்டில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குழப்பமளிப்பதாக முன்னாள் இந்திய வீரர் திலீப் வெங்சர்க்கார் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நேர்மையான சொல்ல வேண்டுமெனில் ஸ்ரேயாஸ் ஐயரின் தேர்வு எனக்கு குழப்பமளிக்கிறது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஃபிட்டாக இல்லாத அவர் வெள்ளைப்பந்து போட்டிகளுக்கு ஃபிட்டாக இருக்கிறார்”
இதையும் படிங்க: ரோஹித்தை கழற்றி விட்டது சரியே.. சிட்னி மாதிரி இந்தியாவுக்கு இன்னொரு பரிதாபம் வேணாம்.. உத்தப்பா
“சிவப்பு மற்றும் வெள்ளைப்பந்து போட்டிகளுக்கான வித்தியாசத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் வெள்ளைப்பந்து போட்டிக்கு ஃபிட்டாக இருந்தால் டெஸ்ட் போட்டிக்கும் ஃபிட்டாக இருப்பீர்கள். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட கிரிக்கெட்டை மட்டும் தேர்ந்தெடுப்பது எனது புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. சுப்மன் கில் மிகவும் நல்ல ஆல் ஃபார்மர் பிளேயர். பொதுவாக நீங்கள் ஒரு அணியை தேர்ந்தெடுத்து அதில் சிறந்த வீரரையே தலைவராக தேர்ந்தெடுப்பீர்கள். அந்த வகையில் சுப்மன் கில் ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைவராக சரியானவர் என்று நினைக்கிறேன். டி20 கிரிக்கெட்டிலும் அவர் அசத்துகிறார்” என்று கூறினார்.



