2011 வரைக்கும் நல்லாத்தான் விளையாடுனேன். அதுக்கு அப்புறம் சேன்ஸ்ஸே கொடுக்கல – இந்திய வீரர் புலம்பல்

Rp-singh
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்து சமூக வலைதளம் மூலம் தங்களது கிரிக்கெட் அனுபவம் குறித்து பகிர்ந்து வரும் இவ்வேளையில் பல்வேறு இந்திய வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என அனைவரும் தங்களது கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

RP 2

- Advertisement -

அந்த வரிசையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆர் பி சிங் தோனி உடனான தனது நட்பு குறித்து உருக்கமாக ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தோனி தலைமையிலான இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலககோப்பை தொடரை கைப்பற்றிய போது இந்திய அணியில் விளையாடியவர் ஆர் பி சிங்.

ஆர்.பி. சின் 2005 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகமானார். அதிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடிய அவர் 14 டெஸ்ட் போட்டிகள் 58 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தற்போது ஆர்பி சிங் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

RP

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா உடன் கலந்துரையாடி ஆர்.பி.சிங் தோனி குறித்த பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : தோனியும் நானும் நிறைய நேரங்களை ஒன்றாகவே செலவிடுவோம் அவர் எனது மிகவும் நெருங்கிய நண்பர் ஆவார். அவர் இந்திய அணிக்கு கேப்டனாக மாறி அவருடைய தகுதி உயர உயர சென்றுகொண்டே இருந்தார்.

- Advertisement -

ஆனாலும் இதுவரை எங்களுக்குள் இருக்கும் நட்பு அப்படியேதான் இருக்கிறது. கிரிக்கெட்டை பொறுத்த வரை எங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நாங்கள் மிகச் சிறந்த நண்பர்களாக இப்போதும் இருக்கிறோம். மேலும் தொடர்ந்த அவர்: நான் அப்போது இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தேன். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் நிச்சயம் என் பெயர் இடம் பெற்று இருக்கும் ஐபிஎல் தொடர்களில் நான்கு முறை அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில்இருந்தேன்.

RP 1

ஆனால் அதன் பின்பு 2011க்கு பிறகு எனக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏன் என்னை சேர்க்கவில்லை என்ற கேள்விக்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வாய்ப்பு வழங்கப்படும் என தேர்வாளர்கள் கூறினார்கள். ஆனால் அதன் பின்னர் எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்று வேதனையுடன் ஆர்.பி. சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement