அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து வீரருக்கு அபராதம் விதித்து அதிரடி காட்டிய – ஐ.சி.சி

Roy
- Advertisement -

உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி நேற்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடந்தது. பர்மிங்காமில் நடந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 223 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஸ்மித் 85 ரன்கள் அடித்தார்.

aus vs eng

- Advertisement -

அதன் பின்னர் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 33வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில் அதிரடியை வெளிப்படுத்திய ஜேசன் ராய் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டார்.

20 ஓவரில் கம்மின்ஸ் வீசிய பந்தை அடிக்க முயற்சி செய்தார். என்றாலும் பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. விக்கெட் கீப்பர் கேரி அவுட் என்று அவரிடம் முறையிட்டார். அம்பயர் தர்மசேனா அதற்கு விரலை உயர்த்தி அவுட் என்று கூறிவிட்டார். அதிர்ச்சி அடைந்த ராய் பந்து பேட்டில் படவில்லை என்று அவரிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Roy-1

டிஆர்எஸ் வாய்ப்பு பயன்படுத்து விட்டதால் வேறுவழியின்றி அதிர்ச்சியோடு பெவிலியன் திரும்பினார் ராய். டீவி ரீபிளேவில் இந்த பந்து அவுட் இல்லை என்பதும் அவர் கையில் பந்து படவில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது. ராய் 65 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களுடன் 85 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பெரிய உதவியாக இருந்தார்.

Roy 2

இந்நிலையில் இந்த போட்டியில் ராய் அவுட் ஆனதும் அம்பயரின் உத்தரவை மீறி அவரிடம் நேரடியான வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை மைதான அம்பயர்கள் ஐசிசியிடம் குற்றச்சாட்டினை வைத்தனர். இதனால் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ராய்க்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு டிமெரிட் பாய்ண்ட்களும் கொடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement