ENG vs PAK : இங்கிலாந்து வீரர்களுக்கே அபராதம் விதித்து அதிரடி காட்டிய – ஐ.சி.சி

நேற்று உலகக் கோப்பை தொடரின் ஆறாவது போட்டி லண்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சர்ஃப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், மோர்கன் தலைமை

Roy
- Advertisement -

நேற்று உலகக் கோப்பை தொடரின் ஆறாவது போட்டி லண்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சர்ஃப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

Roy 1

- Advertisement -

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர்களின் அத்துமீறிய நடவடிக்கை காரணமாக அந்த அணியின் இரண்டு வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது அதன்படி ஜேசன் ராய் மற்றும் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர் ஆகியோருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதித்து அதிரடி காட்டியுள்ளது.

உலக கோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியை ஐசிசி நிர்வாகம் கண்டிப்பாக தண்டிக்காது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தவறு செய்தால் அவர்களுக்கு தண்டனை நிச்சயம் என்ற ரீதியில் ஐசிசி இந்த தண்டனை விதித்துள்ளது. அதன்படி போட்டியின் போது கேட்சசை தவறவிட்ட ஜேசன் ராய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியதற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.

Archer

அதைப்போல ஜோப்ரா ஆர்ச்சர் அம்பயரின் தீர்ப்பினை எதிர்த்து முறையிட்டதால் அவருக்கும் தண்டனை விதித்து அதிரடி காட்டியுள்ளது. மேலும் இருவருக்கும் சஸ்பென்ஷன் புள்ளிகளையும் ஐசிசி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement