- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரராக சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்திய – ரோவ்மன் பவல்

இந்திய அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றின் முக்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

ரோவ்மன் பவல் நிகழ்த்திய மாபெரும் சாதனை :

பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணியானது இரண்டாவதாக பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக விளையாடிய அதிரடி வீரரான ரோவ்மன் பவல் சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது ஐந்தாவது வீரராக களமிறங்கிய அவர் 19 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.

அவர் அடித்த இந்த இரண்டு சிக்ஸர்களின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக முதல் சர்வதேச வீரராக 150 சிக்ஸர்களை பூர்த்தி செய்தார். இவருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 149 சிக்ஸர்களை அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒரு வீரர் அடித்த அதிகபட்ச சிக்சர்களாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : இதுதான் கரெக்ட்டான டீம்.. எந்த மாற்றமும் இல்லை.. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டாசுக்கு பிறகு – கேப்டன் பேச்சு

இந்நிலையில் அவரை முந்திய ரோவ்மன் பவல் 150 சிக்ஸர்களை முதல் வீரராக அடித்தது மட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அதிக சிக்சர்களை அடித்த வீரராகவும் முதலிடம் பிடித்துள்ளார். இவர்கள் இருவருக்கு அடுத்து 136 சிக்ஸர்களுடன் எவின் லீவிஸ் மூன்றாவது இடத்திலும், கிறிஸ் கெயில் 124 சிக்சர்களுடன் நான்காவது இடத்திலும், கைரன் பொல்லார்டு மற்றும் சிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் 99 சிக்ஸர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -