ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது அக்டோபர் இரண்டாம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கிய வேளையில் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இந்த போட்டி முடிவுக்கு வந்தது.
இப்படி நடக்கும்னு நாங்க எதிர்பாக்கல : ரோஸ்டன் சேஸ்
இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்கள் மட்டுமே குவிக்க பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.
பின்னர் 286 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்களுக்கு சுருண்டதால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் கூறுகையில் : எப்பொழுதுமே டாசில் வெற்றி பெற்ற பிறகு முதல் இன்னிங்சில் விளையாடும்போது மிகப்பெரிய ரன் குவிப்பை வழங்க வேண்டும். ஆனால் நாங்கள் 160 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது ஏமாற்றம் அளிக்கிறது.
பேட்டிங்கில் இந்த மோசமான ஆட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற மைதானங்களில் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். ஆனால் முதல் இன்னிங்சில் நாம் குறைவாக ரன்களை குவித்துவிட்டு அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கஷ்டம். இந்த மைதானத்தில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் அதிகம் இருந்தது. அதனால் நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டத்தின் போது பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் என்று இந்த முடிவை எடுத்தோம்.
இதையும் படிங்க : டாஸ் முக்கியம் இல்ல.. எங்களுக்கு இதுதான் முக்கியம்.. வெற்றிக்கு பின்னர் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய – கேப்டன் கில்
இருந்தாலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பேட்டிங்கில் எங்களால் பெரியளவில் ரன்களை குவிக்க முடியாமல் போய்விட்டது. நிச்சயம் இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் பலமாக திரும்பவும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.



