இந்தியாவுடனான அரையிறுதி போட்டியின் போது இவரது பவுலிங்கை நினைத்து எனக்கு ராத்திரி முழுவதும் தூக்கமில்லை – ராஸ் டெய்லர்

Taylor
- Advertisement -

முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது. இந்த போட்டியில் முதல் நாளில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யும் போது மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு அடுத்த நாள் ரிசர்வ் டே நாளில் அந்த போட்டி நடந்தது.

ferguson

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தற்போது அந்த போட்டி குறித்து நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : ரிசர்வ் டே நாளில் அதிகாலை 3 மணிக்கு எனக்கு முழிப்பு வந்துவிட்டது. மேலும் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அதற்கு காரணம் யாதெனில் மீதமுள்ள 4 ஓவர்களில் 2 ஓவர்களில் உலகின் தலைசிறந்த பவுலர்களான யார்க்கர் ஸ்பெசலிஸ்ட் பும்ரா மற்றும் ஸ்விங் கில்லாடி புவனேஸ்வர் குமார் ஆகியோர் பந்துவீச போகிறார்கள் அவர்களை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.

Bumrah

அதே போன்று காலை போட்டி துவங்குவதற்கு முன்னர் வில்லியம்சன் என்னிடம் உண்டு மீதமுள்ளவர்களில் கடைசி வரை களத்தில் நின்று எப்படியாவது 240 ரன்களை எட்டும் அளவிற்கு விளையாடுங்கள் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். எப்படியோ அந்த இழக்கும் வந்தது. நாங்கள் இந்தப் போட்டியிலும் ஜெயித்தோம். இந்த அரையிறுதிப் போட்டியை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது என்று டெய்லர் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement