என்னை பொறுத்தவரை வயது என்பது ஒரு நம்பர் மட்டும்தான் – ஓய்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராஸ் டெய்லர்

Taylor
- Advertisement -

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு வீரருக்கு வயதாகிவிட்டால், அவர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தாலும் அவர் ஓய்வு பெற்றேயாக வேண்டும் என்ற விமர்ச்சனங்கள் எழுந்துகொண்டே தான் இருக்கும். இதற்கு முன்பு இந்த விமர்ச்சனங்களுக்கு பல்வேறு முன்னனி வீரர்களும் ஆளாகியிருக்கின்றனர். இந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர்தான் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த வீரரான ராஸ் டெய்லர். 37 வயதாகும் ராஸ் டெய்லர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர் தனது ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை.

Taylor-2

- Advertisement -

இதற்கிடையில் தன்னுடைய ஓய்வு முடிவு குறித்து அவர் பேசியுள்ளார். நியூசிலாந்து நாட்டின் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் 30 வயதை எட்டிய பிறகு தங்களது ஓய்வு முடிவு குறித்து யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் நான் 35 வயதில் ஓய்வு பெறலாம் என்று நினைத்திருந்தேன். பிறகு அந்த முடிவை மாற்றிக்கொண்டேன். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு நான் அந்த முடிவை எடுத்திருப்பேன் என்றும் எனக்கு தோன்றுகிறது.

ஆனால் அதற்குப் பிறகும் என்னால் ஓய்வு முடிவை அறிவிக்க முடியவில்லை என்று அவர் கூறினார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், என்னிம் பேசும் பல நபர்கள் நான் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி விட்டேன். அதனால் எந்த நேரத்தில் ஓய்வு பெறுவது சரியாக இருக்குமென்று உங்களுக்கு தெரியும் என்று கூறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை வயது என்பது ஒரு எண் மட்டுமே.

Taylor-3

நியூசிலாந்து அணிக்காக பேட்டிங்கிலும் சரி பீல்டிங்கிலும் சரி என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்றி கூறிய அவர், தற்போதைக்கு ஓய்வு பெறும் முடிவில் தான் இல்லை என்பதையும் அறிவித்திருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள இருக்கும் நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர் மிக முக்கியமான ஒரு வீரராக இடம் பிடித்திருக்கிறார்.

Taylor1

2006ஆம் ஆண்டு அந்த அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7379 ரன்களையும், 232 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 8574 ரன்களையும் அடித்திருக்கிறார். மேலும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர் பட்டியிலில் ராஸ் டெய்லர் தான் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement