நான் சந்தித்த பவுலர்களிலே இவங்க 3 பேர்தான் என்னை ரொம்ப தொல்லை பண்ணி இருக்காங்க – ராஸ் டைலர் பேட்டி

Taylor
- Advertisement -

நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேனான ராஸ் டைலர் தோனியின் காலத்தை சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து அந்த அணிக்காக விளையாடி வருகிறார். 36 வயதான அவர் நியூசிலாந்து அணிக்காக மூன்று விதமான போட்டிகளிலும் 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் மட்டுமின்றி உலகளவிலும் இந்த சாதனையை செய்து அசத்தியவர்.

taylor 1

- Advertisement -

தற்போது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன் அடித்த வீரர் எனும் பெருமையும் பெற்றுள்ளார். நியூசிலாந்து அணிக்காக 101 டெஸ்ட் போட்டிகளிலும், 232 ஒருநாள் போட்டிகளிலும், 102 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அந்த அணிக்கு கிடைத்த ஒரு மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இவர்.

இந்நிலையில் தான் சந்தித்த மிகவும் அசவுகரியமான கடினமான பந்துவீச்சாளர் யார் என்பதை பற்றி பேசியுள்ளார். ராஸ் டைலர் நான் சந்தித்த பந்துவீச்சாளர்களில் மூன்று பேர்தான் என்னை மிகவும் கடினமாக உணர வைத்தார்கள்.

muralitharan

அதில் இரண்டு பேர் இலங்கை வீரர்கள் ஒன்று சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். அவரது பந்துவீச்சு என்னை திக்குமுக்காட வைத்து இருக்கிறது . மற்றொன்று லசித் மலிங்கா அவர்களின் துல்லியத்தன்மை, என்னை ஆடுகளத்தில் டான்ஸ் ஆட வைத்திருக்கிறது. அவர் என்ன பந்து வீசுகிறார் என்பதை கணிப்பது மிகப்பெரிய சிரமம் .

Steyn

மூன்றாவதாக தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டைன். இவரிடம் வேகம் துல்லியத் தன்மை ஆகிய அனைத்துமே இருக்கிறது. இவரை, எதிர்கொள்ள எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் பயப்படுவார்கள் தொடர்ச்சியாக சரியான பந்துகளை வீசுவதில் இவர் வல்லவர் என்று கூறியுள்ளார் டைலர்.
இத்தனை சர்வதேசப் போட்டிகளில் ஆடியுள்ள ராஸ் டைலர் மொத்தம் 17 ஆயிரம் சர்வதேச ரன்களையும் குவித்துள்ளார்.

Advertisement