347 ரன்கள் குவித்தும் இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – விவரம் இதோ

Taylor
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசியது.

- Advertisement -

அதன்படி 50 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 103 ரன்களும், ராகுல் 88 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கேப்டன் கோலியும் 51 அடிக்க பேட்டிங்கில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது.

அதனைத் தொடர்ந்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூஸிலாந்து சார்பாக ராஸ் டைலர் 84 பந்துகளில் 109 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். மேலும் அந்த அணியின் கேப்டன் லேதம் மற்றும் துவக்க வீரர் ஹென்றி நிகோலஸ் ஆகியோர் அரைசதம் அடித்து வெற்றிக்கு பங்களித்தனர்.

taylor 1

இந்நிலையில் எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியடைந்தது ரசிகர்களை சற்று ஏமாற்றைத்தை அளித்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது யாதெனில் ஜடேஜா வீசிய பந்தில் டெய்லர் கொடுத்த கேட்ச் வாய்ப்பினை குல்தீப் தவறிவிட்டார். இதனை பயன்படுத்திக்கொண்ட டெய்லர் சதம் அடித்தது மட்டுமின்றி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

Taylor 2

மேலும் இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு இந்த போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் உதவ வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பீல்டிங்கும் சற்று சொதப்பலாக அமைந்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதுமட்டுமின்றி 24 வைடுகள் உட்பட 29 எக்ஸ்ட்ரா வீசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement