வீடியோ : மைதானத்திலேயே கண் கலங்கி அழுத ராஸ் டெய்லர் – நெகிழ்வைத்த தருணம் (நடந்தது என்ன?)

Taylor-1
Advertisement

தென் ஆப்பிரிக்க அணியின் அனுபவ வீரரான ராஸ் டைலர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின்னர் தான் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது முடிவடைந்த பின்னர் முறைப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். ஏற்கனவே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை சந்தித்து இருந்த வேளையில் இந்த இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

Taylor

இந்த போட்டியில் கடைசியாக விளையாடிய ராஸ் டைலர் இன்னிங்சின் கடைசி விக்கெட்டை எடுத்து வெற்றியுடன் விடைபெற்றார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய அவர் : என்னுடைய கரியரை வெற்றியுடன் முடித்திருக்கிறேன். கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி. இந்த போட்டியில் வெற்றியுடன் விடைபெற வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் வெற்றியுடன் விடைபெறுவது மகிழ்ச்சி என்று கூறினார். பின்னர் தொடர்ந்து பேசிய அவர் ஒரு கட்டத்தில் தனது கடைசி போட்டியில் விளையாடி கடைசியாக பேசுவதை நினைத்து சில நொடிகள் கண்கலங்கினார்.

அவர் இப்படி கண்கலங்கி பேசவே மைதானத்தில் இருந்த ரசிகர்களும் சற்று வருத்தம் அடைந்தனர். இருப்பினும் அவரை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் நாலாபுறமும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரப்படுத்தி அவரை உற்சாகமாக வழி அனுப்பினர்.

இதையும் படிங்க : போனவருஷம் 16.25 கோடிக்கு ஏலம் போனாரு. இந்த வருஷம் ரிட்டயர்டு ஆயிட்டாரு – தெ.ஆ வீரர் எடுத்த முடிவு

சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7683 ரன்களையும் அடித்துள்ளார். 19 சதங்கள் 35 அரை சதங்கள் அடித்துள்ள அவர் 290 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement