டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கவுள்ள நியூசி ஜாம்பவான் பேட்ஸ்மேன் – விவரம் இதோ

taylor-1
- Advertisement -

ஐசிசி நடத்திய முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியிருக்கிறது நியூசிலாந்து அணி. இந்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் அணியாக திகழ்ந்த அந்த அணி, முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரையும் வென்று அசத்தியிருக்கிறது. நான்காவது இன்னிங்சில் 53 ஓவர்களில் 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டாம் லதாம் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழ்ந்து வெறியேறிய பின்னர், கேன் வில்லியம்சனுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மூத்த வீரரான ராஸ் டெய்லர்.

nz

- Advertisement -

நான்காவது இன்னிங்சில் 47 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்ததோடு மட்டுமல்லாமல், வில்லியம்சனுடன. இணைந்து 94 ரன்கள் பார்ட்னர் அமைத்தும் அந்த அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்த வெற்றிக்கு பின்னர் பேட்டியளித்த அவர், இந்திய அணியானது எதிரணிக்கு வெற்றியை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்காது என்று கூறியிருப்பதோடு மட்டுமல்லாமல்,

தனது ஹெல்மட்டிற்கும் நன்றியை தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, எதிரணிக்கு அவ்வளவு எளிதில் வெற்றியை விட்டுக்கொடுக்க விரும்பாத இந்திய அணி இந்த போட்டியிலும் எங்களின் மேல் அதிகமான அழுத்தத்தை கொடுத்தனர். எனவே அதிலிருந்து வெளியே வர நான் அடித்து ஆடப் போகிறேன் என்று கேன் வில்லியம்சனிடம் கூறினேன். உலக தரம் வாய்ந்த பவுலரான பும்ராவின் பந்து வீச்சில் இருந்து என்னைக் காப்பாற்றிய ஹெல்மட்டிற்கு நன்றி என அந்த பேட்டியில் அவர் கூறினார்.

taylor

நான்காவது இன்னிங்சில் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளரான பும்ரா வீசிய அதிவேக பந்தில் தலையில் அடிவாங்கிய ராஸ் டெய்லர், அதிலிருந்து தன்னை பாதுகாத்த ஹெல்மட்டிற்கு நன்றியை தெரிவித்தது அனைவரிடமும் சிரிப்பை வரவழைத்தது. அந்த பேட்டியில் மேலும் பேசிய அவர் கூறியதாவது, இந்த வெற்றியானது என் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாத தருணத்தை கொடுத்துள்ளது. மேலும் எங்களது அணியை கடைசி வரை கொண்டு சென்றதில் மகழ்ச்சியடைகிறேன். 2019ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததால் மனதளவில் ஏற்பட்ட காயத்திலிருந்து தற்போது மீண்டு வந்துள்ளேன் என்றும் அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

taylor 1

2019ஆம் ஆண்டு இதே இங்கிலாந்தில் நாட்டில் நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்திருக்கிறது நியூசிலாந்து அணி. அப்போது அந்த தொடருடன் ஓய்வு பெறும் முடிவில் இருந்த ராஸ் டெய்லர், அந்த தோல்விக்கு பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டு தொடர்ந்து அந்த அணிக்காக விளையாடி வந்தார். இந்த போட்டிக்கு முன்பாக அளித்த பேட்டி ஒன்றில், இந்த தொடரை வென்று ஐசிசி கோப்பையை கைப்பற்றினால் எனது ஓய்வு முடிவு குறித்து யோசிப்பேன் என்றும் அவர் அறிவித்திருந்தார். தற்போது அதுபோலவே நடந்துள்ளதால் விரைவிலேயே சர்வதேச போட்டியில் இருந்து ராஸ் டெய்லர் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement