இந்திய அணிக்கு கோலியை போல இங்கிலாந்து அணியை இவர் வழிநடத்துவார் – ஜோ ரூட் ஆரூடம்

- Advertisement -

கொரோனா வைரசிற்கு பிறகு முதல் கிரிக்கெட் தொடராக வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அடுத்த மாதம் 8ஆம் தேதி இந்த தொடர் துவங்க உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் ஜோ ரூட்டிற்கு ஜூலை மாதத்தில் குழந்தை பிறக்க இருக்கிறது.

Root

- Advertisement -

இதன் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இவரால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது துணை கேப்டனாக இருக்கும் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார். இதுகுறித்து தற்போது புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில்…

விராட் கோலி ஆடுகளத்தில் இறங்கிவிட்டால், அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் அப்படி அவரை போலவே ஆட வேண்டும் என்று நினைப்பார். அந்த அளவிற்கு அவரிடம் ஆக்ரோஷம் தெரியும். அதேபோல், பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பொறுப்பில் எப்படி செயல்படுவார் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.

Stokes

அவரிடம் அணியை வழிநடத்தும் திறமை இருக்கிறது. துணை கேப்டனாக இருக்கும் போதே அவர் ஒரு தலைவராக உருமாறிவிட்டார். விராட் கோலியை போன்று இங்கிலாந்து அணியை அவர் வழி நடத்துவார். அவரிடம் கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு சரியான திறமை இருக்கிறது என்று பேசியுள்ளார் ஜோ ரூட்.

Stokes

இந்த டெஸ்ட் தொடர் கொரோனா வைரஸ் அதற்குப்பிறகு கிரிக்கெட் திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எட்டாம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், 16 ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும், 25ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டியும் நடக்கவிருக்கிறது. கிட்டத்தட்ட மூன்றாவது போட்டியில் மீண்டும் ஜோ ரூட் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement