ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய டுவைன் பிராவோ. மாற்று வீரரை அறிவித்த அணி நிர்வாகம் – விவரம் இதோ

bravo

டி20 போட்டிகளில் மிகுந்த அனுபவம் வாய்ந்த சிறப்பான ஆல்-ரவுண்டரான டுவைன் பிராவோ உலகில் உள்ள அனைத்து டி20 தொடர்களிலும் முக்கிய வீரராக பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் நட்சத்திர வீரராக விளையாடி வந்த பிராவோ கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியின்போது காயம் அடைந்தார்.

bravo

இந்த காயம் காரணமாக அந்த போட்டியின் மீதி ஓவர்களில் விளையாடாத டுவைன் பிராவோ இந்த தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். மேலும் அவர் இந்தத் தொடரில் இருந்து வெளியேறி நாடு திரும்புவதை சிஎஸ்கே அணி நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் டுவைன் பிராவோ ஏற்கனவே இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது அந்த தொடரில் இருந்து அவர் விலக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக ரொமரியோ ஷெப்பர்ட் என்கிற வீரர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

bravo

இந்த அறிவிப்பினை வெஸ்ட் இண்டீஸ் அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே நாடு திரும்புவதற்கு முன்பு பிராவோ வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் : சென்னை அணியில் இருந்து விலகுவது மிகவும் வருத்தமாக இருப்பதாகவும், சென்னை அணியின் ரசிகர்கள் தொடர்ந்து அணியை ஆதரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

romario

இந்த சீசன் எதிர்பார்த்தது போல எங்களுக்கு அமையவில்லை. இருப்பினும் சென்னை அணியை தொடர்ந்து ஆதரிக்குமாறு ரசிகர்களுக்கு உருக்கமான ஒரு வேண்டுகோள் விடுத்து பேசியுள்ளார் பிராவோ என்பது குறிப்பிடத்தக்கது.