என்னைப்பற்றி எதுவேனா பேசுங்கள். ஆனால் இவர்களை பற்றி பேசவேண்டாம் – ரோஹித் ஓபன் டாக்

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான டி20 அணியில் இருந்து இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா ஓய்வு காரணமாக இடம்பெறவில்லை. இந்நிலையில் அவர் திடீரென்று ஒரு ஆவேசமான பேட்டி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் இந்திய வீரர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி தேவையில்லாமல் எழுதுபவர்களுக்கு ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : மூத்த வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை நிர்ணயிக்கப்பட்ட நாட்களை தாண்டி தங்களுடன் தங்க வைப்பது குறித்த சர்ச்சைகள் எழுந்தன. அதில் குடும்பத்தினர் தேவையில்லாமல் இழுக்கப்படுவதால் வேதனையாக இருக்கிறது.

எங்கள் குடும்பங்கள் எங்கள ஆதரிக்கவும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்படியே எங்களுடன் உள்ளன. இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த விடயத்தில் நீங்கள் என்னை பற்றி யோசியுங்கள். ஆனால் என்னுடைய குடும்பத்தை பற்றி எப்போதும் நினைக்க வேண்டாம் குடும்பத்தினர் நம் வாழ்வின் ஒரு முக்கிய அம்சம் என்பதனை விராட் கோலி உணர்ந்திருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

Ritika

எனவே வீரர்களை பற்றி பேசுவதோடு முடித்துக் கொள்ளுங்கள் அவருடைய குடும்பத்தை பற்றி யாரும் பேச வேண்டாம் ஏனெனில் அதுவும் அணியின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக அமைய வாய்ப்பு உள்ளது என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -