இந்திய அணியில் இணையும் முன் எனக்கு இந்த கடமை பாக்கி இருக்கு. அதனை செய்தே தீருவேன் – ரோஹித் ஓபன் டாக்

Rohith
- Advertisement -

ரோகித் சர்மா இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாக இருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று விதமான போட்டிகளில் இந்திய அணிக்காக துவக்க வீரராக தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் அதோடு இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருப்பதால் அனைத்து வீரர்களிடமும் பரஸ்பரம் சகஜமாக பழகி தன்னை மையப்படுத்தி கொள்ள வேண்டும். அப்படி ஒரு நிலையில் இருக்கும் இவர் தற்போது தனது அணியினரை மிஸ் செய்வதாக கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் ஃபேஸ்புக் பக்கத்தில் கால்பந்து தொகுப்பாளர் ஒருவருடன் பேசிய ரோகித்சர்மா பேசியதாவது : இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் நாங்கள் நண்பர்கள். வீடியோகால் மூலம் தொடர்பில் இருக்கிறோம். ஆனால் களத்தில் எனது வீரர்களை மிஸ் செய்கிறேன். அவர்களுடன் நான் செய்யும் அரட்டையை மிஸ் செய்கிறேன்.

ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 300 நாட்கள் நாங்கள் ஒன்றாக இருப்போம். ஒன்றாக விளையாடுவோம், ஒன்றாக சாப்பிடுவோம் .அவர்கள் என் குடும்பத்தை போன்றவர்கள். பொது முடக்கும் முடிந்தவுடன் முதன்முதலாக உடனடியாக வீரர்களைத் திரட்டி பயிற்சி செய்ய வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் ரோஹித் சர்மா .

Rohith-1

மேலும் பொதுமுடக்கம் துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் முழுத் தகுதியுடன் இருந்ததாகவும், வைரஸ் காரணமாக அது துரதிஸ்டவசமாக நடக்காமல் போய் விட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் இந்த முடக்கம் முடிந்தவுடன் உடனடியாக மைதானத்திற்கு சென்று மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் தகுதி பரிசோதனை ஆகியவற்றை செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார் ரோஹித்.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி2- தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பிய ரோஹித் அதன்பிரகாது இந்திய அணிக்காக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அகர்வால் துவக்க வீரராக விளையாடிவந்தார். இந்நிலையில் மீண்டும் தென்னாபிரிக்க அணிக்கு இந்திய அணிக்கு திரும்ப இருந்த இவர் கொரோனா வைரஸ் காரணமாக அவரால் இந்திய அணியில் இணைய முடியாமல் போனது.

Rohith-4

அதன் காரணமாக ஏற்பட்ட வருத்தத்தையே இந்த பதிவின் மூலம் ரோஹித் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து பயிற்சியை ஆரம்பிக்க உள்ள நிலையில் மும்பையில் கொரோனா தீவிரம் குறையாத காரணத்தினால் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் பயிற்சியில் ஈடுபடமுடியாது என்று ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நியூசிலாந்து தொடரின் போது காயம் ஏற்பட்டதாகவும் தற்போது அந்த காயத்தில் இருந்து மீண்டு விட்டாலும் நான் இரண்டு மாதங்களாக வீட்டுக்குள்ளே இருப்பதனால் உடற் தகுதியில் பின்னடைவு ஏற்படும் என்று நினைக்கிறேன். இதனால் ஒரு வார பயிற்சிக்குப் பிறகு உடல் தகுதியை நான் நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Advertisement