ஐ.பி.எல் 2021 : இந்திய வீரர்கள் யாரும் படைக்காத சாதனையை செய்ய காத்திருக்கும் – ரோஹித் சர்மா

rohith 1

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் காட்டும் அதிரடி பற்றி நாம் கூறி ரசிகர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஹிட்மேன் என்று புகழ்பெற்ற ரோகித்சர்மா அனாவசியமாக சர்வதேச பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிக்சர் அடிக்கும் வல்லமை கொண்டவர். அதிலும் அவர் புல்ஷாட் மூலம் அடிக்கும் சிக்ஸர்களுக்கு ரசிகர்கள் ஏராளம் என்று கூறலாம்.

rohith

இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் ஒரு இமாலய சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார். எப்போதுமே களமிறங்கி முதலில் சில பந்துகளை கணித்து விட்டால் பின்னர் வாண வேடிக்கையை காட்டும் ரோகித் சர்மா எளிதாக சிக்சர்களை அடித்து அசத்துவார்.

- Advertisement -

அந்த வகையில் ரோகித் சர்மா இதுவரை டி20 கிரிக்கெட்டில் 397 சிக்ஸர்களை விளாசி உள்ளார். இந்நிலையில் இன்றைய போட்டியில் சி.எஸ்.கே அணிக்கு எதிராக 3 சிக்ஸர்களை அடிப்பதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்களை விளாசும் முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைப்பார்.

rohith 1

இதுவரை இந்திய வீரர்கள் யாரும் 400 சிக்சர்களை அடிக்காத நிலையில் தற்போது 400 சிக்சர்களை அடிக்க 3 சிக்சர்கள் மட்டுமே பாக்கி உள்ளதால் நிச்சயம் இந்த போட்டியில் ரோகித் சர்மா தனது சாதனையை நிகழ்த்துவார் என்றும் ரசிகர்களுக்கு ஒரு சிக்ஸர் விருந்து வைப்பார் என்றும் நாம் நம்பலாம்.

- Advertisement -
Advertisement