சென்னை வந்ததும் தமிழில் பேசிய ஹிட்மேன். நம்ம தமிழ்நாடு னா சும்மாவா ? -வைரலாகும் வீடியோ

Rohith
- Advertisement -

இந்தியாவில் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை 14-வது ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்தியா முழுவதும் ஆறு மைதானங்களில் மட்டுமே போட்டி நடைபெறுவதால் ரசிகர்களிடையே இந்த தொடர்பு பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்த கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இம்முறை இந்தியாவில் 6 மைதானங்களில் மட்டுமே இந்த தொடர் முழுவதும் நடைபெறுவதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாட முடியாத சூழ்நிலையில் இருக்கையில் எல்லா அணிகளும் வெவ்வேறு மைதானங்களில் மோத இருக்கின்றன. அதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டியாக மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற உள்ளது.

இதற்காக மும்பை அணி வீரர்கள் ஏற்கனவே சென்னை வந்து பயிற்சியை துவங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த முதல் போட்டிக்காக சென்னை வந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா சென்னை வந்தடைந்தோம் பயிற்சியை துவங்கி இருக்கிறார். இந்நிலையில் சென்னை வந்து சேர்ந்த நிலையில் ரோகித் சர்மா குறித்த ஒரு வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

அதில் தமிழில் பேசும் ரோகித் சர்மா : வணக்கம் சென்னை மும்பை இந்தியன்ஸ் இங்கே வந்துட்டோம் என்று கூறுகிறார். பொதுவாக சென்னை அணியில் இடம்பெறும் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தமிழில் பேசி வீடியோ வெளியிடும் வேலையில் தற்போது பயிற்சிக்காக சென்னை வந்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவும் தமிழில் பேசியுள்ளது இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

அது மட்டுமின்றி இணையத்திலும் வைரலாகி வருகிறது. மேலும் சென்னை மண்ணில் எந்த வீரர்கள் கால் வைத்தாலும் தமிழ் தானாக வரும் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement