Rohith Sharma : சென்னையில் சி.எஸ்.கே அணியை நாங்கள் தொடர்ந்து ஜெயிக்க இதுவே காரணம் – ரோஹித் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் குவாலிபயர் 1 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும்

Rohith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் குவாலிபயர் 1 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை 131 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ராயுடு 42 ரன்களும், தோனி 37 ரன்களை குவித்தனர். சாகர் 4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பிறகு 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்தார். மேலும் ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச்சென்றார்.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோஹித் கூறியதாவது : இது ஒரு சிறப்பான போட்டியாகும். மேலும், இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டோம் என்பது ஒரு சிறந்த உணர்வாகும். இந்த போட்டியில் சென்னை அணியை எங்களது சிறந்த பவுலர்கள் மூலம் 140 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஜெயந்த் யாதவ் சிறப்பாக பந்துவீசினார்.

bumrah

தோனியை இறுதி நேரத்தில் கட்டுப்படுத்துவது அவசியம் அதனை நாங்கள் சரியாக செய்தோம். சென்னை அணியில் உள்ள ஸ்பின்னர்களுக்கு எதிராக சூரியகுமார் யாதவ் சிறப்பாக ஆடினார். சென்னை மைதானத்தின் தன்மை நாங்கள் விளையாடி, விளையாடி புரிந்து கொண்டதால் எங்களால் இங்குள்ள சூழ்நிலையும், மைதானத்தின் தன்மையும் புரிந்து கொண்டு ஆடமுடிகிறது அதுவே சி.எஸ்.கே அணிக்கு எதிரான வெற்றியின் ரகசியம் ஆகும்.

Advertisement