Rohith Sharma : ஒருவரை மட்டும் நம்பினால் இது நடக்காது. அணியில் உள்ள அனைவரும் இதற்கு முக்கியம் – ரோஹித் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 51 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், வில்லியம்சன் தலைமை

Rohith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 51 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

Rohith

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிகாக் 58 பந்தில் 69 ரன்களை குவித்தார், ரோஹித் 24 ரன்களை குவித்தார். சிறப்பாக பந்துவீசிய கலீல் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை அடித்து டை செய்தது. அந்த அணியின் மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடி 47 பந்தில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் போட்டி சூப்பர் ஓவர் சென்றது.

Manish Pandey

சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 4 பந்துகளில் 8 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது. அதற்கடுத்து மும்பை அணி சார்பாக ஹார்டிக் பாண்டியா மற்றும் பொல்லார்ட் களமிறங்கினர். முதல் பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை உறுதி படுத்தினார் பாண்டியா. பிறகு 4 பந்துகளில் 9 ரன்கள் அடித்து மும்பை அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

Hardik

போட்டி முடிந்து மும்பை அணியின் வெற்றி குறித்து பேசிய ரோஹித் கூறியதாவது : இந்த போட்டியில் ஈரமான பந்தினை வைத்துக்கொண்டு இந்த இலக்கில் வெற்றி பெறுவதற்கு எங்களது அணியின் சிறந்த பந்து வீச்சாளர்கள் காரணம். ஒவ்வொரு ஆண்டும் வீரர்கள் மாறிவருகின்றனர் இருப்பினும் அவர்களை ஒரு சீராக கொண்டு வந்து அணியை வெற்றியை நோக்கி கொண்டு செல்வது என்பது சாதாரணமானது இல்லை.

மேலும், மும்பை அணி சாம்பியன் அணியாக திகழ ஒரே ஒரு வீரரை மட்டும் நம்பி இருந்தால் போதாது. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரரும் தங்களது பங்களிப்பை அளிக்கவேண்டும். அனைவரும் ஒட்டுமொத்தமாக சிறப்பான பங்களிப்பை தரும்போது நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தற்போது உள்ள மும்பை அணி கோப்பையை கைப்பற்றும் அளவிற்கு பலமாகவே உள்ளது. அனைவரும் தங்களது பங்களிப்பை அளிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று ரோஹித் கூறினார்.

Advertisement