Rohith Sharma : வெற்றிக்கான பசி இவரிடம் உள்ளது. இவரின் சிறப்பான ஆட்டத்தினாலே வெற்றி கிடைத்தது – ரோஹித் பெருமிதம்

ஐ.பி.எல் தொடரின் 51 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், வில்லியம்சன் தலைமை

Rohith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 51 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

Rohith

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிகாக் 58 பந்தில் 69 ரன்களை குவித்தார், ரோஹித் 24 ரன்களை குவித்தார். சிறப்பாக பந்துவீசிய கலீல் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை அடித்து டை செய்தது. அந்த அணியின் மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடி 47 பந்தில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் போட்டி சூப்பர் ஓவர் சென்றது.

Manish Pandey

சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 4 பந்துகளில் 8 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது. அதற்கடுத்து மும்பை அணி சார்பாக ஹார்டிக் பாண்டியா மற்றும் பொல்லார்ட் களமிறங்கினர். முதல் பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை உறுதி படுத்தினார் பாண்டியா. பிறகு 4 பந்துகளில் 9 ரன்கள் அடித்து மும்பை அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

Hardik

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா கூறியதாவது : இந்த மைதானத்தில் நாங்கள் இன்னும் 40-50 ரன்கள் வரை அடித்திருக்க வேண்டும். முதல் 6 ஓவர்களில் அவர்கள் ரன்களை அடித்து விட்டனர். அடுத்த 8 ஓவர்கள் ஸ்பின்னர்கள் சிறப்பாக வீசினார்கள் அவர்களே போட்டியை மீண்டும் மும்பை அணியின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர். மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடினார்.

Bumrah

மேலும், எங்கள் அணியின் நட்சத்திர வீரர் பும்ரா சிறப்பாக பந்துவீசினார். சூப்பர் ஓவரில் அவர் சிறப்பாக பந்துவீசினார். அவருக்கு வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற பசி உள்ளது. அதனாலே அவர் எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற நினைத்து விளையாடுகிறார். அவரின் சிறப்பான பந்துவீச்சாலே இந்த வெற்றியினை பெற்றோம் என்று தெரிவித்தார். மேலும், டிகாக் தொடர்ந்து மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் என்றும் ரோஹித் தெரிவித்தார்.

Advertisement