நான் ஒரே வார்த்தையை வீரர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். அதுவே வெற்றிக்கு காரணம் – ரோஹித் மகிழ்ச்சி

rohith

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி சிறப்பான துவக்கத்தை கண்டது. முதல் விக்கெட்டுக்கு ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் 117 ரன்கள் குவிக்க இறுதியாக 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் குவித்து இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

pant

இந்திய அணி சார்பாக கேஎல் ராகுல் 65 ரன்களும், ரோகித் சர்மா 55 ரன்களும் குவித்தனர். இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஷல் பட்டேல் நான்கு ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் கூறுகையில் : ஒரு அணியாக இது எங்களுக்கு சிறப்பான ஆட்டமாக அமைந்துள்ளது.

- Advertisement -

நிச்சயம் இந்த மைதானத்தில் உள்ள கண்டிஷன் ஈசியாக இல்லை என்றாலும் அவர்களை நாங்கள் குறைந்த ரன்களுக்கு சுருட்டியது அற்புதமாக இருந்தது. நியூசிலாந்து அணியின் பேட்டிங் பலம் என்ன என்று எங்களுக்கு தெரியும். ஆரம்பத்திலேயே அவர்கள் நல்ல ஷாட்டுகளை விளையாடினார்கள் அதனால் ரன்கள் வேகமாக வந்தன. இருந்தாலும் நான் எங்களது வீரர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தது என்னவெனில் ஒரு விக்கெட் விழுவது மட்டும்தான். முதல் விக்கெட்டை வீழ்த்தினால் அவர்களை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதுதான். அதன்படி இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அவர்களை கட்டுக்குள் வைத்து இறுதியில் குறைந்த ரன்களுக்கு சுருட்டியது சிறப்பாக இருந்தது.

harshal

இந்திய அணியின் பென்ச் ஸ்ட்ரென்த் மிகவும் அற்புதமாக இருக்கிறது. எப்போதுமே வீரர்களுக்கு சுதந்திரம் அளிப்பது முக்கியமான ஒன்று. அந்த வகையில் இன்றைய போட்டியில் சுதந்திரமாக விளையாடிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது ஒரு புதிய இளம் அணி இந்த அணியில் உள்ள நிறைய வீரர்கள் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை. எனவே அவர்கள் களத்தில் நேரம் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது.

- Advertisement -

இதையும் படிங்க : ஜாம்பவானின் கையில் அறிமுக தொப்பியை வாங்கிய ஹர்ஷல் படேல் – மோதிர கையால் குட்டு வாங்கியிருக்காரு

அடுத்த போட்டியில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை யோசிக்கும் நேரம் இது கிடையாது. இந்திய அணிக்கு என்ன தேவையோ அதனை நாங்கள் செய்ய உள்ளோம். இந்திய அணிக்கு தொடர்ந்து நிறைய டி20 போட்டிகள் உள்ளன. எனவே அனைத்து வீரர்களுக்கும் களத்தில் விளையாட நேரம் கொடுக்கப்படும். இந்த போட்டியில் ஹர்ஷல் படேல் சிறப்பாக பந்து வீசினார். இதுபோன்ற சூழ்நிலையிலும் அவர் ஸ்லோ பால்களை சிறப்பாக பயன்படுத்துகிறார். நிச்சயம் அவர் ஸ்கில் உள்ள பவுலர் தான் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement