ஜாம்பவானின் கையில் அறிமுக தொப்பியை வாங்கிய ஹர்ஷல் படேல் – மோதிர கையால் குட்டு வாங்கியிருக்காரு

Harshal

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் காயமடைந்த இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் சிராஜுக்கு பதிலாக இன்று ஹர்ஷல் படேல் தனது அறிமுக போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.

Harshal 1

ராஞ்சி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 2வது போட்டியில் ஹர்ஷல் படேல் இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ளார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய அவர் 15 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்திய அணியில் தேர்வாகிய அவருக்கு இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐபிஎல் போட்டியில் ஹாட்ரிக் வீழ்த்தியது மட்டுமின்றி 5 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்த ஹர்ஷல் படேல் இன்றைய போட்டியிலும் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் இவருக்கு அறிமுக போட்டியிலேயே ஒரு அதிர்ஷ்டமான நிகழ்வு கிடைத்துள்ளது. அது யாதெனில் இந்திய அணியின் ஜாம்பவான் பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஜித் அகார்கரின் கையினால் இவர் தனது அறிமுக தொப்பியை பெற்றுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : என் மனதை உடைத்து விட்டீர்கள். இருந்தாலும் ஐ லவ் யூ ஏ.பி.டி – உருக்கமாக விடைகொடுத்த விராட் கோலி

இந்திய அணிக்காக நூத்தி 191 ஒருநாள் போட்டிகள், 26 டெஸ்ட் போட்டிகள், 4 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அகார்கர் கிட்டத்தட்ட 350 விக்கெட்டுகளை கைப்பற்றியவர். அவரின் கையால் அறிமுக தொப்பியை வாங்கியது ஹர்ஷல் படேலுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றே கூறலாம்.

Advertisement