Rohith Sharma : தோனி அணியில் இல்லாததும், இவர் எங்கள் அணியில் இருந்ததும் வெற்றிக்கு காரணம் – ரோஹித் மகிழ்ச்சி

ஐ.பி.எல் தொடரின் 44 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் சர்மா தலைமை

Rohith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 44 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதின.

Raina

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 48 பந்துகளில் 67 ரன்களை குவித்தார். இறுதி நேரத்தில் பாண்டியா அதிரடியாக 23 ரன்களை குவித்தார்.

பின்பு 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Malinga

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா கூறியதாவது : நான் டாஸ் தோற்றது நல்லதாக மாறியது இல்லையென்றால் நானும் சேசிங்கையே தேர்வு செய்திருப்பேன். டாஸ் எங்களை மீறி சென்றாலும் போட்டியில் நாங்கள் நன்றாக ஆடினோம். சென்னையில் எப்போது விளையாடினாலும் அது கடினமான போட்டியாகவே நான் கருதுகிறேன். ராகுல் சாகர் சிறப்பாக பந்துவீசினார். இவர் எங்கள் அணியின் சொத்து மட்டுமல்ல இந்திய கிரிக்கெட்டின் சிறந்த வீரராக மாறுவார்.

Watson

தோனி சென்னை அணியில் இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய போனஸ். அவர் சென்னை அணியில் ஆடாதபோது எதிரணிக்கு அது சாதகமான விடயமாக அமையும். தோனி அணியில் இருந்தால் அந்த அணிக்கு எப்போதும் நல்ல முடிவுகளாகவே இருக்கும். ஆனால், அவர் உடல்நலமில்லாமல் இருப்பது எங்களுக்கு இன்று சாதகமாகியது. சேசிங்கில் அவர் இல்லாததால் சென்னை அணிக்கு இலக்கை கடக்க கடினமாக இருந்தது, மொத்தத்தில் இன்று நாங்கள் எண்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றோம் என்று ரோஹித் கூறினார்.

Advertisement