Rohith Sharma : 20 ஆவது ஓவரை இதற்காகவே நான் மலிங்காவிடம் கொடுத்தேன் – ரோஹித் சர்மா

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித்

Rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

Dhoni

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். சென்னை அணியின் சார்பாக தீபக் சாகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக வாட்சன் 80 ரன்களைக் குவித்தார். பும்ரா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

Watson-1

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா கூறியதாவது : இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினோம் .அதனாலேயே இந்த தொடரின் உயர் நிலையில் இருந்தோம். இந்த தொடரை நாங்கள் இரண்டாக பிரித்து செயல்பட்டோம் எது செய்தாலும் ஒரு அணியாக செயல்பட்டோம். எங்கள் அணியின் பந்துவீச்சு இந்த தொடர் முழுவதும் சிறப்பாக இருந்தது. இந்த பந்து வீச்சு பலமே பல போட்டிகளில் எங்களுக்கு தனித்துவமான வெற்றியைத் தந்தது. எந்த பந்துவீச்சாளர்களுக்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்தாலும் அவர்கள் அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அணிக்காக வெற்றியை தேடித் தந்தனர்.

மலிங்கா ஒரு சாம்பியன் பவுலர் அவர் மும்பை அணிக்காக பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறார். நான் கடைசிவரை ஹர்டிக் பாண்டியாவிற்கு கொடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், மலிங்கா பலமுறை எங்களுக்கு கடைசி ஒவரில் சிறைப்பாக பந்துவீசி வெற்றியை தேடித்தந்தது இருக்கிறார். அதனால் அவருக்கு கடைசி வரை கொடுத்தேன் அவரும் சிறப்பாக பந்துவீசி எங்கள் அணிக்கு வெற்றி பெற்று தந்து விட்டார் என்று ரோஹித் சர்மா கூறினார்.

Advertisement