Mumbai Indians : இவர்களுக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அவர்களுக்காக பெற்ற வெற்றியே இது – ரோஹித்

Rohith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 59 ரன்களை குவித்தார்.

csk-vs-mi

பிறகு 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி துவக்கத்திலேயே சரிவை கண்டது. ராயுடு மற்றும் வாட்சன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேலும், பின்னால் வந்த வீரர்களும் வரிசையாக நடையை கட்ட சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

- Advertisement -

போட்டி முடிந்த வெற்றி குறித்து பேசிய ரோஹித் கூறியதாவது : துவக்கத்தில் இரண்டு போட்டிகளை தோற்றோம். அதன் பின் இனிவரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்றே கருதினோம். ஏனெனில் துவக்கத்தில் அதிக போட்டிகளை தோற்று பின்னால் வரும் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெறுவது கடினம். அதுவும் இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் என்பது ஒரு பெரிய பிராண்ட். அதற்காக நாங்கள் சிறப்பாக ஆடியே ஆக வேண்டும். அதற்கு கிடைத்த வெற்றிதான் இது.

Pollard

இந்த வெற்றி தொடரும். முன்கூட்டியே தொடரில் வெற்றி அடைந்தால் தான் தொடரின் இறுதியில் நாம் மற்ற அணியை மனவலிமையுடன் எதிர்க்க முடியும். இன்றைய போட்டியில் 170 ரன்கள் டார்கெட் போதும் என்றே நான் நினைத்தேன். அதன்படி எங்களது பந்துவீச்சாளர்களும் சென்னை அணியை சுருட்டி வெற்றியை பறித்து தந்தனர் என்று ரோஹித் கூறினார்.

Advertisement