இவர் ஒரு மேட்ச்வின்னர். இவரை இந்த போட்டியோடு கிரிக்கெட் உலகம் இழப்பது வருத்தமளிக்கிறது – ரோஹித் உருக்கம்

Rohith-2
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 44 ஆவது லீக் போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 264 ரன்களை குவித்தது அதிகபட்சமாக மேத்யூஸ் 113 ரன்கள் குவித்தார்.

பிறகு 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர். ஆட்ட நாயகனாக ரோகித் தேர்வானார்.

Malinga

நேற்றைய போட்டி முடிந்து பேட்டி அளித்த ரோகித் சர்மா இலங்கை வீரரான மலிங்காவின் கடைசி போட்டி குறித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில் : இலங்கை அணிக்கும் எனது மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மலிங்கா சாம்பியன் பந்து வீச்சாளராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகளாக அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதை நாம் பார்த்து இருக்கிறோம். அவர் ஒரு சிறந்த மேட்ச் வின்னர் எனக்கும் அவருக்கும் சிறப்பான நட்பு உள்ளது. அவரை நெருக்கமாக இருந்து பார்த்திருப்பதால் நான் சொல்கிறேன் நிச்சயம் இந்த கிரிக்கெட் உலகம் அவரை உலகம் நிச்சயம் இழக்கும் என்று உருக்கமாக ரோஹித் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement