எங்களின் தோல்விக்கு பெங்களூரு அணியின் வீரரான இவர் ஒருவரின் சிறப்பான ஆட்டமே காரணம் – ரோஹித் வருத்தம்

Rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவரின் கடைசி பந்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

RcbvsMi-1

- Advertisement -

இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் 48 ரன்களையும், மேக்ஸ்வெல் 39 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோன்று இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோற்று ஒரு மோசமான சாதனையை சந்தித்துள்ளது.

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : முதல் போட்டியில் தோல்வி என்பது முக்கியமான விடயம் கிடையாது. ஏனெனில் இந்த தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான் அதைவிட முக்கியம். இந்த போட்டியை பொறுத்தவரை நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டதாக கருதுகிறோம். இறுதி வரை நாங்கள் கடுமையான போட்டியை கொடுத்தோம்.

harshal

இருப்பினும் 20 ரன்கள் வரை நாங்கள் குறைவாக குவித்து விட்டோம். எங்களுக்கு கிடைத்த துவக்கத்தின் படி நாங்கள் இன்னும் 20 ரன்கள் அதிகம் அடித்திருக்க வேண்டும். இந்த முதல் போட்டியில் நாங்கள் சில தவறுகளை செய்து விட்டோம். அதிலிருந்து மீண்டு வருவோம் என நம்புகிறேன். ஜென்சன் மிக சிறப்பாக பௌலிங் செய்தார். எந்த சூழ்நிலையிலும் அவர் பவுலிங் செய்ய தற்போது தயாராகியுள்ளார். இந்த போட்டியின்போது முக்கிய கட்டத்தில் நாங்கள் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ்டியன் ஆகியோரது விக்கெட்டை எடுக்க முயற்சித்தோம் அதனாலேயே பும்ரா மற்றும் போல்ட் ஆகியோரை பந்துவீச செய்தோம்.

abd

ஆனால் அப்படி செய்தும் டிவில்லியர்ஸின் விக்கெட்டை எடுக்க முடியாமல் போனது. இந்த மைதானம் பேட்டிங்க்கு சற்று கடினமாகவே இருந்தது. இருப்பினும் இந்த மைதானத்தில் டிவில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி பெங்களூரு அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுவிட்டார் என்று தோல்வி குறித்து ரோகித் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement