நான் இரட்டைசதம் அடிக்க இதுதான் காரணம் – ரோஹித் ஓபன் டாக்

Rohith-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரஹானே 115 ரன்களும் ஜடேஜா 51 ரன்களும் எடுத்தனர்.

Rohith

- Advertisement -

இந்நிலையில் தனது இரட்டை சதம் குறித்து நேற்றைய ஆட்டம் முடிந்து ரோகித் சர்மா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தொடக்க வீரராக மட்டும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்தது இல்லை. எந்த இடத்தில் இறங்கினாலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்றுதான் நான் நினைப்பேன். தற்போது 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே நான் தொடக்க வீரராக களம் இறங்கியுள்ளேன்.

இன்னும் நிறைய போட்டிகளில் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்ற ஆசை என்னிடம் உள்ளது. அதனால் என்னுடைய தொடக்க இடம் குறித்து தற்போது எதுவும் பெரிதாக என்னால் பேச முடியாது. எனினும் ஐந்தாவது ஆறாவது இடத்தில் விளையாடுவதை விட துவக்க வீரராக விளையாடுவது சவாலானது. ஏனென்றால் 30 40 ஓவர்கள் கழித்து விளையாடுவது சற்று எளிது ஆனால் தொடக்கத்திலேயே விளையாடும் போது பந்தின் வேகம் மற்றும் ஸ்விங் அதிகமாக இருக்கும். அதனை கணித்து விளையாடுவது கடினம்.

மேலும்அந்த சூழ்நிலையில் பந்தை எப்படி அடிப்பது என்பது சவாலான விடயமாகும். இந்த போட்டியில் சற்று பொறுமையாக விளையாடினாலும் பின்னர் எனது இயல்பான ஆட்டத்திற்கு மாறினேன். என்னுடைய இயல்பான ஆட்டத்தின் மூலம் எனக்கு ரன்கள் வந்து சேர்ந்தது இந்த இரட்டை சதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சவாலை எதிர்கொண்டு இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது என்னுடைய இந்த இரட்டை சதத்தை காரணமாக அமைந்தது என்று ரோகித் சர்மா கூறினார்.

Advertisement