எனக்கு முன்னர் மும்பை அணிக்கு கேப்டனாக இவரே நியமிக்கப்பட இருந்தார் – மனம்திறந்த ரோஹித்

- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும் கோப்பையை கைப்பற்றி மிகச் சிறந்த அணிகளாக வலம் வருகிறது. இதில் மும்பை அணி கடந்த 7 வருடத்திற்குள் நான்கு கோப்பைகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஐபிஎல் தொடர் துவங்கியது முதல் ஐந்து வருடங்களாக அந்த அணி படு மோசமாக சொதப்பி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கேப்டன்களையும் மாற்றி வந்தது . ஹர்பஜன், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஷான் பொல்லாக், டுவைன் பிராவோ ஆகிய பலர் கேப்டனாக இருந்தனர் ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை.

அதன் பின்னர் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க 2013, 2015, 2017, 2019 என ஒரு வருடம் விட்டு ஒருவருடம் கோப்பையை கைப்பற்றி கொடுத்தார். தற்போது தான் எப்படி கேப்டன் பதவிக்கு வந்தார் என்று கூறியுள்ளார் ரோகித் சர்மா. இதுகுறித்து அவர் கூறுகையில்.: நான் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இருந்து மும்பை அணிக்கு வந்திருந்தேன்.

Rohith

வாய்ப்பு கிடைத்தால் எப்படிப்பட்ட இடத்தையும் நிரப்புவதற்காக காத்திருந்தேன். 2013 ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பின்னர் ஏற்கனவே தலைமை தாங்கிய ஹர்பஜன் கேப்டனாக வாய்ப்பிருந்தது ஆனால் ரிக்கி பாண்டிங் என்னை அழைத்து நீதான் கேப்டன் என்று கூறினார். இப்படித்தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி எனக்கு கிடைத்தது என்று கூறியுள்ளார் ரோகித் சர்மா.

- Advertisement -

ரோகித் சர்மா ஐபிஎல் அணிகளில் மிகச் சிறந்த அணியை வழிநடத்தி வருகிறார். தற்போது வரை 4898 ரன்கள் குவித்து ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ரிக்கி பாண்டிங் என்மீது வைத்திருந்த நம்பிக்கையினால் மட்டுமே நான் கேப்டன் ஆனேன் என்று ரோஹித் கூறினார்.

Ponting

தற்போது இந்தியா அணியில் மூன்று வடிவ அணிக்கும் கேப்டனாக இருக்கும் கோலி முக்கிய போட்டிகளில் சொதப்புவதால் டி20 அணிக்கு கேப்டனாக ரோஹித் நியமிக்க வேண்டும் என்றும் பல முன்னாள் வீரர்களும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்ஸ்டாகிராம் லைவில் அஷ்வினுடன் பேசிய ரோஹித் மும்பை அணிக்கு தனக்கு முன்னர் யார் கேப்டனாக செயல்பட இருந்தது என்பது குறித்து பேசியிருந்தார்.

அதுகுறித்து ரோஹித் கூறியதாவது : ஹர்பஜன் கேப்டனாக செயல்படமாட்டார் என்று தெரிந்ததும் நான் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று நினைத்தேன் அதற்கு தயாராகவும் இருந்தேன். ஆனால் அப்போது மும்பை அணியில் தினேஷ் கார்த்திக்கும் இருந்ததால் அவரே கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் தெரியவந்தது. ஆனால் ரிக்கி பாண்டிங் என்னிடம் வந்து கேப்டன் பொறுப்பை ஏற்கச்சொன்னார்.

Ponting

அவர் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர். ஒரு வீரரிடம் உள்ள திறமையை அறிந்து அதனை வெளிக்கொணர்வதில் அவரே வல்லவர். அதனாலே அவரால் தொடர்ந்து 2 முறை 50 ஓவர் உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு பெற்றுக்கொடுத்தார் என்றும் பாண்டிங் குறித்து ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement