Rohith Sharma : நான் இரட்டை சதத்தை எதிர்பார்த்து ஆடவில்லை – ரோஹித் சர்மா

உலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான்

Rohith-1
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

ind pak

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் 140 ரன்களும், கோலி 77 ரன்களையும் குவித்தனர்.

அதன் பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழைய குறுக்கிட்டதால் போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ஓவர்களில் 136 ரன்கள் அதாவது 40 ஓவர்களில் 302 ரன்கள் அடிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை மட்டுமே அடித்தது. இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

rohith

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ரோகித் சர்மா கூறியதாவது : இந்த போட்டியில் ஒரு அணியாக வெற்றி பெற்றது மகிழ்ச்சி. ஏனெனில் அனைத்து வீரர்களும்இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடினார்கள். இந்த போட்டியில் அவுட்டான விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. உண்மையாகச் சொல்கிறேன் நான் 200 அடிப்பதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால் இந்த மைதானம் பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது. இதனால் கடைசி வரை களத்தில் நின்று விளையாட ஆசைப்பட்டேன் ஆனால் தவறுதலாக ஆடிய அந்த ஷாட்டினால் பாதியிலேயே அவுட்டாகி வெளியேறினேன். இந்த போட்டியில் ராகுல் சிறப்பாக ஆடினார் என்றும் ரோஹித் கூறினார்.

Advertisement