பி.சி.சி.ஐ எடுத்த இந்த முடிவு மிகச்சரியானது. எல்லோரும் சேர்ந்த தான் இது நடக்கும் – ரோஹித் சர்மா பாராட்டு

Rohith
- Advertisement -

இந்தியாவில் கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கிய 14வது ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த வேளையில் இந்த தொடரானது பாதி போட்டிகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ஐபிஎல் வீரர்களிடையே ஏற்பட்டுவரும் கொரோனா பரவல் காரணமாக இத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ ஏற்கனவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதற்கு காரணமாக கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி, மூத்த அதிகாரி காசிவிஸ்வநாதன் என மூவருக்கும் டெல்லி அணியை சேர்ந்த அமித் மிஸ்ரா மற்றும் சன் ரைசர்ஸ் அணியை சேர்ந்த சஹா ஆகியோருக்கும் கொரோனா உறுதியானதால் இந்த தொடர் ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகம் ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பது குறித்து எடுத்த இந்த முடிவு பாராட்டக்கூடிய ஒன்று என மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியுள்ள வீடியோவில் கூறியதாவது : எதிர்பாராதவிதமாக இந்த ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு இந்த தொடரை ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்த பி.சி.சி.ஐ யின் இந்த முடிவு நல்ல ஒரு முடிவுதான்.

அரசு சொன்ன விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை நாம் விரட்டி அடிப்போம் என அந்த வீடியோவில் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். ரோஹித் மட்டுமின்றி மும்பை அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் என பலரும் இந்த வீடியோவில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் சார்பில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement