அட நம்ம ரோஹித்தா இது ? ஒற்றை கையால் கேட்ச் பிடித்து ரோஹித் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

Rohith

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக இன்று சரியாக 1 மணி அளவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

Rohith 1

மிகுந்த எதிர்பார்ப்புடன் துவங்கிய இந்த முதல் பிங்க் பால் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டே ஒரு சாதனையுடன் நிகழ்ந்துள்ளது. அதன்படி ஏழாவது ஓவரை வீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா மூன்றாவது பந்தில் 4 ரன்கள் எடுத்திருந்த இம்ரான் கைசை எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழக்கச் செய்தார்.

அதனைத்தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டாக பங்களாதேஷ் கேப்டன் மொமினுல் ஹக்ஆட்டமிழந்தார். உமேஷ் யாதவின் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் மொமினுல் ஹக் . ரோகித் சர்மா பிடித்த இந்த கேட்ச் மிக அட்டகாசமாக இருந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒற்றைக் கையால் இரண்டாவது ஸ்லிப்பில் இருந்து முதல் ஸ்லிப்பில் டைவ் அடித்த ரோகித் அதனை அபாரமாக பிடித்து அசத்தினார். மேலும் முதல் ஸ்லிப்பில் இருந்த கோலியின் கைகளுக்கு எளிதாக சென்ற கேட்சினை முன்கூட்டியே பாய்ந்து பிடித்து பிங்க் பால் டெஸ்டில் முதல் கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையை ரோஹத் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -