ஐ.பி.எல் தொடரில் ரோஹித் சர்மா படைத்துள்ள அசத்தல் சாதனைகள் – ஓர் அலசல்

Rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தற்போது வரை 12 வருடங்கள் விளையாடியிருக்கிறார். முதல் இரண்டு வருடங்கள் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு ஆடிய அவர் தற்போது வரை அடுத்த பத்து வருடங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார் 2013 ஆம் ஆண்டு முதல் கேப்டனாக இருந்த இவர் நான்கு முறை கோப்பையை கைப்பற்றி கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட ரோகித் சர்மா படைத்த மிக முக்கியமான சாதனைகளை தற்போது பார்ப்போம்.

- Advertisement -

அதிக கோப்பையை கைப்பற்றிய ஒரே கேப்டன் :

ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக நான்கு முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்கள் 2013, 2015, 2017 மற்றும் 2019 ஆகிய 4 தொடர்களில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறார். மேலும் இந்த தொடர்களில் எல்லாம் குறைந்தது 300 ரன்களுக்கு மேல் விளாசி இருக்கிறார் ரோகித் சர்மா

Rohith

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர் :

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தற்போதுவரை ரோகித் சர்மா 143 போட்டிகளில் ஆடி 3828 ரன்கள் குவித்திருக்கிறார். அவருக்கு அடுத்து சச்சின் டெண்டுல்கர் இல்லை அதாவது இந்த இரண்டாவது இடத்தில் கெரோன் பொலார்ட் 2755 ரன்களுடன் இருக்கிறார்.

அதிக அரை சதங்கள் அடித்த வீரர் தற்போதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 28 அரை சதங்கள் அடித்து இருக்கிறார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக அரை சதங்கள் அடித்த வீரர் இவர் மட்டுமே.

Rohith

அதிக கேட்ச் பிடித்த வீரர் :

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தற்போது வரை 59 கேட்ச்களை பிடித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக கேட்ச் பிடித்த வீரர் இவர்தான்.

Advertisement