கொல்கத்தா அணிக்கு எதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இதுவே காரணம் – மனம் நெகிழ்ந்த ரோஹித்

Rohith

ஐபிஎல் தொடரின் 32 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக தேர்வு செய்தார்.

kkrvsmi

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி மிக மோசமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 148 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கம்மின்ஸ் 53 ரன்களும் மோர்கன் 39 ரன்களை குவித்தனர். அதனை தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 149 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

அந்த அணியின் துவக்க வீரர் குவிண்டன் டிகாக் 78 ரன்களும் பாண்டியா 21 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி போட்டியை எளிதில் வென்று மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது. ஆட்டநாயகனாக டிகாக் தேர்வானார்.

Dekock

இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த மும்பை அணியின் கேப்டன் ரோகித் கூறுகையில் : இந்த போட்டியில் சேஸிங் செய்து வெற்றி பெற்றது சிறப்பான ஒன்று. மேலும் எங்கள் அணிக்கு இது கூடுதலான நம்பிக்கையை கொடுத்துள்ளது. தொடரின் முதல் பாதியில் நாங்கள் சரியாக சேசிங் செய்யவில்லை என்று கருதுகிறோம். ஆனால் இப்போது எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

இனிவரும் போட்டிகளிலும் நாங்கள் இதேபோன்று இக்கட்டான சூழ்நிலையிலும் வந்தாலும் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறேன்.. க்ருனால் மற்றும் ராகுல் ஆகியோர் ரசலுக்கு எதிராக சிறப்பாக வீசினார். இருப்பினும் பும்ரா அவரது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். டிகாக் உடன் பேட்டிங் செய்வது மிகவும் அருமையாக செட் ஆகி உள்ளது.

MI

சூழ்நிலையை புரிந்து சிறப்பாக ஆடி வருகிறோம். மேலும் அவர் மீது எந்த அழுத்தத்தையும் கொடுக்க விடாமல் சுதந்திரமாக விளையாட வைத்தால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும். எங்கள் அணி வீரர்கள் அனைவரும் வெற்றிக்காக பாடுபட்டு வருகின்றனர். அனைவரும் ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடி வருகின்றனர் என்றும் ரோகித் குறிப்பிடத்தக்கது.