பலம் வாய்ந்த கொல்கத்தா அணியை வீழ்த்த இதுவே காரணம் – ரோஹித் சர்மா மகிழ்ச்சி

Rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 5வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது.

kkrvsmi

- Advertisement -

அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 54 பந்துகளில் 80 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 47 ரன்களும் குவித்தனர். பின்னர் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பாக பேட் கம்மின்ஸ் 33 ரன்களும் தினேஷ் கார்த்திக் 30 ரன்களும் குவித்தனர்.

இந்த போட்டியில் மும்பை அணியை சேர்ந்த பந்துவீச்சாளர்கள் நால்வரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகன் ஆட்டநாயகனாக 80 ரன் அடித்த ரோகித் சர்மா தேர்வானார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது : 2014 ஆம் ஆண்டு இங்கு விளையாடிய அணியில் இருவர் (ரோஹித், பொல்லார்ட்) மட்டுமே தற்போது விளையாடுகிறோம்.

இன்றைய போட்டியில் நாங்கள் எங்களது திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த விரும்பினோமோ அதே போன்று நல்ல விதத்தில் செயல்படுத்தினோம். மைதானத்தில் இன்று நான் புல் ஷாட்டுகளை சிறப்பாக ஆடினேன். அதற்காக செய்த பயிற்சி எனக்கு கைகொடுத்தது. மொத்தத்தில் ஒட்டுமொத்தமாக அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. என்னுடைய எல்லா ஷாட்டும் நன்றாகவே அமைந்தது. தனியே ஒரு ஷாட்டை என்னால் குறிப்பிட முடியாது.

- Advertisement -

கடந்த ஆறு மாதங்களாக நான் அதிக அளவு கிரிக்கெட் விளையாடவில்லை இதனால் இன்று சிறிது நேரம் நின்று பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். முதல் போட்டியில் முடியாமல் போன விடயம் தற்போது இந்த போட்டியில் முடிந்துள்ளது. நான் சற்று நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்ததாக உணர்கிறேன். இதுபோன்ற மைதானங்களில் வேகப்பந்து வீச்சு வலுவாக இருக்க வேண்டியது அவசியம்.

pattinson

இந்த போட்டியில் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக போல்ட் மற்றும் பேட்டின்சன் ஆகியோருடன் நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடியது கிடையாது. இம்முறை அவர்கள் வீசுவதை பார்க்க சிறப்பாக இருக்கிறது. மேலும் பேட்டியின் போது கடைசி நேரத்தில் நான் டயர்டு அடைந்தேன் இதன் மூலம் சில பாடங்களையும் கற்றுக் கொள்கிறேன் ஒரு செட் பேட்ஸ்மேனாக நீண்ட நேரம் களத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்று ரோகித் குறிப்பிடத்தக்கது.

Advertisement