டெல்லி அணியை வீழ்த்தி நாங்கள் சாம்பியன் பட்டத்தை பெற இதுவே காரணம் – ரோஹித் சர்மா மகிழ்ச்சி

Rohith

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது.

MIvsDC

அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் 65 ரன்களும், பண்ட் 38 பந்துகளில் 56 ரன்கள் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், குல்டர்நைல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன்பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி டெல்லி அணியின் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டது. இறுதியில் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான ரோகித் சர்மா 51 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இறுதியில் இஷான் கிஷன் 19 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

iyer

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது : இந்த சீசன் முழுவதும் நாங்கள் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே வெற்றிகளை குவிப்பது எங்கள் பழக்கம் என்று கூறியிருந்தேன். அதற்கேற்றார் போல் நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். முதல் பந்தியில் இருந்து நாங்கள் வெற்றியை மற்றும் குறிக்கோளாக நினைத்து விளையாடுகிறோம்.

- Advertisement -

அணியும் சரியான கலவையில் இருப்பதால் அனைத்தும் சரியாக நடக்கிறது. இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னால் நாங்கள் எங்களது பயிற்சியை ஆரம்பித்து விட்டோம். எந்தந்த இடங்களில் தவறு நடக்கிறது என்பதை கடந்த தொடரில் இருந்து கற்று அதனை சரி செய்து வந்தோம். நான் அணியில் சரியான பலம் வகையும் இருக்கும் வகையில் அணியைத் செய்து வருகிறேன். இதுவே எங்கள் அணிக்கு வெற்றியைத் தருகிறது.

Ishan kishan

இன்றைய போட்டியிலும் அணி தெரிவு சரியாக இருந்த காரணத்தாலேயே டெல்லி அணியை எளிதாக வீழ்த்தி கோப்பையை கைப்பற்ற முடிந்தது எனவும் வெற்றி குறித்து ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.