ஐ.பி.எல் போட்டிகளில் இந்த அணியை வீழ்த்துவது மும்பை அணிக்கு சவாலானது – ரோஹித் ஓபன் டாக்

Rohith
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ipl

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் குறித்து ஒவ்வொரு அணியின் பயிற்சியாளர்கள், வீரர்கள், முன்னாள் வீரர்கள் கிரிக்கெட், விமர்சகர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை ஓப்பனாக பேசிவருகின்றனர். அதேபோல் சில கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் இந்த தொடர் குறித்த தங்களது கணிப்புகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஐபிஎல் தொடரில் எந்த அணியுடன் வெற்றி பெறுவது சவாலான விடயம் என்று ரோகித் சர்மா பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

CskvsMi

ஐ.பி.எல் தொடரில் எப்போதும் சென்னை அணியை எதிர்த்து வெல்வது என்பது மிகவும் சவாலான விஷயம். நீங்கள் அவர்களிடமிருந்து எதையும் எளிதாக பெற முடியாது. அனைத்து வகையிலும் சிறப்பான ஆட்டத்தை சென்னை வீரர்கள் வெளிப்படுத்த கூடியவர்கள். எப்போதும் சென்னை அணிக்கு எதிராக விளையாடும் போது சவால் மிகுந்ததாக இருக்கும்.

csk-vs-mi

இந்த தொடரிலும் அந்த சவாலை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் 19ஆம் தேதி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement